பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 67

'எல்லாத்துக்குமே உன்னை மாதிரி ஆளுங்கதான் கார

.ணம்...நல்ல வங்களை எல்லாம் பைத்தியமாக்கறிங்க...... பச்சைக்கிளிகளைப் பிடித்து வந்து பூனைக்கு விருந்து

வைக்கிற மாதிரி இப்படி இளம்பெண்களைக் கொண்டாந்து இந்த நகரம்கிற பலி பீடத்திலே பலியிடlங்க';......

'இந்த ஊர்லேயிருக்கற ரொம்பப் பெரிய மனுசங்க சிலருக்காகத்தான் என்னை மாதிரிச் சின்ன மனுசங்க இதெல்லாம் செய்ய வேண்டியிருக்கு."

'மனிதன் ஒரு சமுதாய மிருகம்னு பழமொழி சொல்லு வாங்க......இந்த மாதிரி நகரங்களிலே சமுதாயத்தையே மிருகமயமாக்கி வச்சிருக்காங்க '... - சின்னிக்கு இந்த வாக்கியங்களின் சூடு உறைக்கவில்லை. புரியாததுதான் காரணமாயிருக்க வேண்டும். அபலைகள், அநாதைகள், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள், ஒதுக்கப்பட்டவர் கள். நியாயம் கிடைக்காமல் நசுங்கியவர்கள் அனைவருமே இந்தப் பெருநகரத்தில், ஐயோ என்னை விட்டுவிடு'என்று அந்தப் பயித்தியக்காரி போல் எதனிடமிருந்தோ எதற்கோ அஞ்சிப்போய் நிலைகுலைந்து நிரந்தரமாகவே ஓடிக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது முத்துராம லிங்கத்துக்கு. இந்தக் கோழைத்தனமான புறமுதுகிடும் ஒட்டத்தை-பயத்தை யாராவது ஒருவன் தடுத்து நிறுத்த வேண்டாமா என்று குமுறினான் அவன், விரித்த கூந்தலும் கிழிந்த ஜாக்கெட்டும் புடவையுமாகப் பித்துப் பிடித்த வளாய் ஒடிய அந்த ஓவிய அழ்கு இன்னும் அவன் கண்முன் :நின்றது. .

'நந்தவனத்தின் மலர்களெல்லாம்-வெறும் நாய்கள் பறிக்க விட்டுவிட்டார் - நவநீத கவியின் அழகிய வரிகள் அவன் நினைவுக்கு வந்தன. அவனும் சின்னியும் நடந்து கொண்டிருந்தார்கள். öm序 ஒன்று அவனருகே உரசிவிடுவது போல் வந்து நின்றது.