பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிசப்த சங்கீதம்

|

செபிக்கத் தங்கம் உருகிப் பரந்து ஓடிய இளம் பெருக்குப்போல் மஞ்சள் நிறம் மாறி இன்னும் கரும்பசுமை படியாத நெற்பயிர் நாற்றங்கால்கள் காற்றில் சிலிர்ப்பதும் தணிவதுமாயிருந்தன. அதிகாலையின் மழலைக்காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. - - வேப்ப மரத்தடி மேட்டில் உட்கார்ந்து பேப்பரும் கையுமாக ஏதோ எழுத முயன்று கொண்டிருந்த முத்து ராமலிங்கத்தைத் தந்தையின் வருகை நிமிர வைத்தது, எழுத முயன்றதன் கவனமும் கலைந்தது.

பக்கத்து நகரமான தேனியில் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருந்த முத்தமிழ் மன்றக் கவியரங்கத்துக்காக அவனையும் பாடக் கூப்பிட்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த பரீட்சை முடிவுகளின்படி கிடைத்திருந்த எம்.ஏ. என்ற இரண்டு எழுத்துக்களையும் கூடப் பின்னால் சேர்த்து அழைப்பிதழில் அச்சிட்டு அவனை மகிழ்வித்திருந் தர்ர்கள். பயிர்கள் என்று அவன் பாடவேண்டிய கவிதைப் பொருளுக்கு நேரே கவிஞர் ப. முத்துராமலிங்கம் எம்.ஏ. என்றிருப்பதைப் பார்க்கும்போது ஏதோ புதிதாக வாங்கிச் சேர்த்த ஒரு தீப்பெட்டிப் படத்துக்காகச் சந்தோஷப்படுகிற சிறுவனின் குதூகலம் உள்ளே சுரந்து ஊறியது. - -

என்னடா? நீபாட்டுக்கு வாய்க்கால் வரப்பைச் சுற்றிக்கிட்டிருந்தா எப்படீன்னேன்? ஏதாச்சும் வேலைக்கு வழியைப் பாரு! பசுங்கிளித் தேவர் மகன் வேலை கிடைக் காமச் சோம்பேறியாத் தெருச் சுத்திட்டிருக்கானாம்னு ஊரிலே நாலுபேர் பேசறத்துக்கு முந்தியாவது ஒரு வேலையைத் தேடிக்கப்பா!' - - -