74 நிசப்த சங்கீதம்
கப்பட்டிருந்தன. ஜன நடமாட்டம் குறைந்து ஆளரவ மற்றிருந்தது. வீடுகளின் ஜன்னல்களில் ஆட்கள் பயந்தபடி எட்டிப் பார்ப்பது தெரிந்தது. . . . .
பொழுது விடிந்து சில நாழிகைக்குள்ளேயே இப்படி ஒரு கலவரமா என்று வியந்தபடி பிளாட்பாரத்தில் நின்றான் முத்துராமலிங்கம். அருட்பிரகாச வள்ளலார் தருமமிகு சென்னை என்று தெரியாத்தனமாக ஏமாந்து போய்ப் பாராட்டிவிட்டாரோ என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. இன்றைய சென்னையில் "இறந்த காலங்களையும் இறந்த காலத்துப் பண்டங்களை விற்கிற மூர்மார்க்கெட்டில் கூட தர்மம் கிடைக்காது போல் இருந்தது. ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் நின்றான்
• rكiة نتي إليه.
1 O
அந்தப் பக்கமாய்ப் பரபரப்பாக ஓடிவந்த மயானத்து வாட்ச்மேனைத் தடுத்து நிறுத்தி, "என்ன ஏது?' என்று: விசாரிக்க முயன்ற முத்துராமலிங்கத்தை, 'இங்க நிக்காதே போலீஸ் புடிச்சிக்கினு போயிரும்' என்று பதற்றத்தோடு தணிந்த குரலில் எச்சரித்துவிட்டு மேலே ஓடினான் அவன். - -
வேறொருவரிடம் விசாரித்ததில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இரு வேறு சாராய கோஷ்டி களுக்கு நடுவே மூண்ட கலவரத்தின் விளைவுதான் அது: என்று தெரிவித்தார் அவர். அப்படிச் சண்டைகள் அங்கு. அடிக்கடி நடப்பதுண்டு என்றும் கூறினார். ... * * -- - அந்தக் கிருஷ்ணாம்பேட்டைப் பகுதிக்குள்ளே அப் போது நுழைகிற விதத்தில் சூழ்நிலை இல்லை. தபால் ஆபீஸுக்குப் போய்த் தந்தைக்கு விரிவாக ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியது முத்துராமலிங்கத்
துக்கு. பக்கத்தில் தபால் ஆபீஸ் இருக்கும் இடத்தை. விசாரித்துக் கொண்டு சென்றான் அவன். ... . . . .