பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி - 75

பெரிய தெருவின் தெற்குக் கோடியில் இருந்த ஒரு தபால் ஆபீஸில் போய் இன்ண்ைடு கவர் ஒன்று வாங்கி னான். சென்னை வந்ததிலிருந்து நடந்ததை எழுதி முடி. வில்தான் ஊர்வலத்துக்கு வந்த லாரியில் ஊர் திரும்பப் போவதில்லை என்பதையும் குறிப்பிட்டு, ஒரு வேலை கிடைத்ததும் அடுத்த கடிதத்தைத் தானே எழுதுவதாகவும் அதை அவன் முடித்திருந்தான்.

தனக்குத் த்ன்னுடைய தந்தை ஏதாவது பதில் எழுத விரும்பினால்கூட அவருக்குத் தர அவனிடம் ஒரு விலாசமு. மில்லை. அப்படி வீடு, விலாசம் என்று எதுவும் இல்லாமலே ஆயிரக்கண்க்கான மக்கள் நடைபாதைகளிலும், கட்டிடங் களின் முகப்புக்களிலும் பெரிய மாளிகைகளின் மாடிப்படி அடிப்புறத்திலுமாக ஆண்டுக் கணக்கில் வாழ்கிற நகரமாக அது இருந்தது. -

கடிதத்தை ஒட்டித் தபாலில் சேர்த்துவிட்டுப் பெரிய தெரு என்ற அந்த நெருக்கடியான குறுகலான தெருவில் அவன் வடக்கு நோக்கி நடந்தபோது ஒரு லாட்ஜின் மாடிப், பகுதியிலிருந்து தன் பரிவாரம் புடை சூழக் கீழே இறங்கி, வந்து கொண்டிருந்த கலையரசி கண்மணியைச் சந்திக்க' நேர்ந்தது. அவள் அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"என்னண்ணே கூட்டத்திலே நடந்த கலாட்டாவிலே ஏதோ காயம்னாகளே?...எங்கே காயம்.கூட்டம் முடிஞ் சதுமே நம்மூர் ஆளுக சொன்னாக.எனக்கு அப்படியே. பதறிப்போச்சு. கையும் ஒடல்ே...காலும் ஒடலே. அப்படியே அந்தக் கடற்கரைக் கூட்டம் பூராச் சல்லம்ை. போட்டுச் சலிச்சாப்ல அண்ணனைத் தேடிப் பார்த்தேன்..." காங்கலை...ஒரே கவலையாப் போச்சு...' -

ஒண்னும் ஆயிடலை நல்லாத்தான் இருக்கேன்.

கவலை வேண்டாம்...'

மேலே அறைக்கு வாங்க. அண்ணன் கிட்டக் கொஞ்சம் தனியாப் பேசனும்.