உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நிசப்த சங்கீதம்

அவர் வேப்பங்குச்சியால் பல் தேய்த்தபடி நின்று கொண்டே பேசியதால் அவனும் மரியாதைக்காக எழுந்து நின்று கொள்ளவேண்டியதாயிற்று. -

பிசிறு தட்டிய நூல் ஊசித் துவாரத்தில் நுழையாமல் விலகி, விலகி மடங்குவதைப் போல் அவனது கவியரங்கக் கவிதைக்கான சிந்தனைகள் விலகி மடங்கின. மனத்தை எதிர் காலக் கவலைகள் என்ற கனமான இருள் வந்து மூடிக் கவ் வியது. - ... '

"'எதுக்கும் ஒரு வாட்டி மெட்ராஸ் போய் வரணும் ஐயா! அதுக்குக் கொறஞ்சது நூறு ருவாயாச்சும் செலவழி யுமேன்னுதான் பார்க்கிறேன்.' . . .

மெட்ராஸ்லே என்னப்பா கொட்டிக்கிட்க்குது? இங்ங்ன மதுரையிலேதான் போய்த் தேடிப்பாரேன். ஏதாச்சும் வேலை கிடைக்காமலா போயிடப் போவுது?"

ரிஸ்ல்ட் வந்தண்ணைக்கி மதுரை போனப்பவே விசாரிச்சுப் பார்த்தேன் ஐயா கம்பெனி வேலைக எதுவும் கெடைக்காதுன்னு தோணுது. அவங்க நாம அங்கே போய் நின்னதுமே தமிழ் எம்.ஏ. யானா வேண்டாம்கிறாங்க." - "அப்ப தமிழ் எம். ஏ.க்கு வேற என்னதான்

கெடைக்கும்? எங்ங்ன கெடைக்கும்?" - -

"ஏதாச்சும் ஹையர் செகண்டரி ஸ்கூல்லே தமிழ் வாத்தியாராப் போகலாம்!" . . . .

"போறது போறப்பக் காலேஜாப் பார்த்துப் போகலா மில்லே?" . . . . -

"இப்ப அது முடியாதையா! காலேஜுங்கள்ளே வேலைக்குச் சேர்த்துக்க எம். ஃபில். வேணுங்கறாங்க. இல்லாட்டி பி.எச்.டி. வேனுங்கறாங்க.

அதெப்படிப்பா? நம்ம செக்கானுாரணிக் குருநாதத் தேவ்ர் மகன் வெறும் எம்.ஏ. தானே? அவன் காலேஜிலே தானே லெச்சரராவோ, என்னமோ இருக்கான்?"

அது ஏழெட்டு வருசத்துக்கு முந்தின சமாசாரம் ஐயா! இப்பல்லாம் அப்பிடி முடியாது." - -