80 நிசப்த சங்கீதம்
"இதுவா? இதுதான் பேசிப் பேசியே வரை ஏமாத் தற்ாங்கன்னு நான் கூட்டத்திலே சொன்னதுக்கு உங்க கட்சிக் கண்மணிகள் அளித்த பரிசு.
'அடப் பாவிங்கள்ா'... 'நீங்களே உங்க கட்சிக்காரங்களை இப்படி அவங்க பேரைச் சொல்லிக் கூப்பிடலாமா?" - -
கண்மணி சிரித்தாள், முத்துராமலிங்கம், 'மறுபடி பார்க்கலாம்...வரேன்' என்று அப்போது விரைந்து அவளி டம் விடை பெற்றான். . . . . அவன் கீழே படியிறங்கித் தெருவுக்கு வந்து வடக்கு நோக்கிச் சிறிது தொலைவு நடந்ததும், அன்று வெங்க டேஸ்வரா ஹாஸ்டலுக்குத் தேடிச் சென்று காண முடியாத அந்த நண்பன் எதிர்ப்பட்டான். முத்துராமலிங்கத்தை எதிரே கண்டதுமே அந்த நண்பனின் முகம் மலர்ந்தது.
1 || . .
நீண்பனைச் சந்தித்த பின்பும், முத்தராமலிங்கத்தின் மனம் நடந்து முடிந்த நிகழ்ச்சியிலேயே இருந்தது. நண்பன் தன்னுடைய விடுதி அறைக்குப் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றான். -
சென்னைக்குப் புறப்பட்ட சூழ்நிலையையும், வந்து சேர்ந்தபின் நடந்தவற்றையும் அவனிடம் விவரித்தபின் அவனைத் தேடி வந்து காணமுடியாமல் போய் விடுதி அறை பூட்டப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டான். நண்பன் அதிகமாகப் பதில் பேசவில்லை. -
தொடர்ந்து முத்துராமலிங்கம்தான் பேசிக்கொண் :டிருந்தான். நண்பன் மட்டும் படாமலும் ஒப்புக்கு ஏதோ மறுமொழி கூறிக் கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. வந்திருப்பவன் எங்கே தன்னோடு உடன்தங்கித் தனக்குச் செலவு வைத்து விடுவானோ? என்ற பயத்தோடும், அதிகச்