பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நிசப்த சங்கீதம்

அங்கே எனக்கு யாரையும் தெரியாதே...' "அதுக்குத்தான் நா கூட வரேனில்ல...' - முத்துராமலிங்கம் அந்த ஆளோடு புறப்பட்டுச் சென்றான். கலகம் மூண்டு போலீசில் பிடிபடும் அந்தப் பதற்றமானதும் பரபரப்பானதுமாகிய சூழ்நிலையிலும் கூடச் சின்னி தான் தெருவில் நின்று விடக் கூடாதே என்று அக்கறையோடு தனக்குத் தகுந்த ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருப்பதை எண்ணி முத்துராமலிங்கத்துக்கு மனம் சிலிர்த்தது. -

'தன் தந்தையோடு நெருங்கிப் பழகியவருக்கு இல்லாத அந்த அக்கறை-தன்னோடு நெருங்கிப் பழகிய நண்பனுக்குக் கூட இல்லாத அந்த அக்கறை-எங்கோ தெருவில் சந்தித்த ஒரு கீழ் மட்டத்தைச் சேர்ந்த மனிதனுக்கு இருப்பதை எண்ணி எண்ணி வியந்தது அவன் மனம். சின்னி பணம் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொல்லி முத்துராம விங்கத்தை அப்போது ரிக்ஷாவிலேயே கூட்டிச் சென்றான் அந்த ஆள், சின்னி என்றைக்கு விடுதலையாகி வெளியே வருவான்’ என்று கேட்டபோது, "அவனுக்கு வேண்டிய மேலிடத்து அரசியல் ஆட்கள் தலையிட்டு விரைவிலேயே அவன் விடுதலைக்கு ஏற்பாடு செய்துவிடுவார்கள்-என்று பதில் கிடைத்தது. . . . . . . . . . - யாரோ மேல் மட்டத்து மனிதர்களின் கொள்ளை லாப ஆசையைப் பூர்த்திச் செய்வதற்காகச் சாராயப் பானையை அது என்ன என்றே தெரியாமல் வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் மாடு போலக் கர்மயோகிகளை ஒப்ப அவர்கள் உழைத்துக் கொண்டிருப்பதாகவே அப்போது முத்துராமலிங்கத்துக்குத் தோன்றியது. -

தென் மாநிலங்களின் பல இனங்களைச் சேர்ந்த அழகிய உடல்வாகு மிக்க பெண்களின் காட்சிப்பட்டறையான அந்த வீட்டில் வாசலில் இருந்த காவற்காரனிடமும், நம்பகமான நாயிடமும் தான் எல்லாப் பொறுப்புக்களும் விடப்பட்டி ருந்தன. -