நா. பார்த்தசாரதி - . 83
அந்த முரட்டுக் காவற்காரன் முத்துராமலிங்கத் திடம் மிக மரியாதையாகப் பழகினான். சின்னியோடு சேர்த்து முந்திய இரவு அவனைப் பார்த்திருந்தது ஒரு காரணம். - * சின்னிக்கு மிகவும் வேண்டியவர் இவர். சின்னி விடுதலையாகி வருகிற வரை. இங்கே இவரைத் தங்க வைத்துக் கவனித்துக் கொள்ளவேண்டும்'- என்று உடன் வந்திருந்த கிருஷ்ணாம்பேட்டை ஆள் காவற்காரனிடம் வற்புறுத்தித் தெரிவித்தது மற்றொரு காரணமாயிருக்க வேண்டும். அவனை அங்கே ஒப்படைத்துவிட்டு உடன்வந்த சுடுகாட்டு வாட்ச்மேன் திரும்பிப் போய்விட்டான். -
உற்சாகமும், கலகலப்பும் நிறைந்த இரவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது அந்த விடுதி முகப்பவுடர், ஸ்தோ, வாசனைத் தைலங்கள் காலமைன் எல்லாம் கலந்த கூட்டான நறுமணம் கூடத்திலிருந்து கிளர்ந்து கொண்டிருந்தது. -
வளையல் ஒலிகள், இனிய பெண்களின் குரல்கள். கலீர் கலீர் என்று சிரிப்பு ஊற்றுக்கள்-எல்லாம் காதில் விழுந்தன. "ஐயோ என்னைவிட்டுவிடு கொன்னுடாதே" என்று கதறியபடி தெருவில் பைத்தியமாக ஓடிய அந்தப் பெண்ணின் நினைவும் முத்துராமலிங்கத்தின் மனத்தில் வந்தது, மனத்தை- விற்றுவிட்டவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் விடுதியில் உடலை விற்றுக் கொண்டிருக்கும் அவர்களை எண்ணியபோது அவன் மனம் இருண்டது.
. பொழுது சாய்ந்து ஒளி மங்கிக்கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் தங்க விரும்பாமல் மொட்டை மாடிக்குச் செல்ல விரும்பினான் அவன்.
உள்ளே தங்கியிருந்த பெண்களுக்கு எல்லாம் தேநீர் கொடுத்துக்கொண்டிருந்த ஓர் ஆளை அவனருகே கூப்பிட்டுக் கொண்டு வந்து அவனுக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தான் சின்னியின் காவற்காரன். தேநீரைப் பருகி விட்டு முத்துராமலிங்கம் மொட்டைமாடிக்குப் போனான்.