86 நிசப்த சங்கீதம்
"urríř tarrtą surgi?” "ஏன்? நான்தான்! பாடக்கூடாதா? அல்லது பாடறத் துக்கு இங்கே சுதந்திரம் கிடையாதா? -
'பாடியது நன்றாயிருந்தது என்றுதான் தேடி வந்தேன். - - - "இங்கே இனிய குரலையோ இசையையோ பாராட்டி டவும் கேட்கவும் பொறுமையுள்ள மனிதர்கள் வருவது வழக்கமில்லை." . -
"நான் குரலையும் இசையையுமே பாராட்ட மட்டும் தான் வந்திருக்கிறேன்."
அவன் இப்படி அவளிடம் கூறிக் கொண்டிருந்த போதே இவர்களுக்குள் வாக்குவாதம் நடப்பதாகப் புரிந்து கொண்ட ஆயாக்கிழவி அருகே வந்து சேர்ந்தாள். z "அடியே பைத்தியக்காரி! எதிர்த்துப் பேசி வாயாலே இரழியாதே...ஐயாவுக்கு ரொம்ப வேண்டியவருடி?... பார்த்துப் பதனமா நடந்துக்கோ' என்று அந்த இளம் பெண்ணை எச்சரித்துவிட்டுப் போனாள் கிழவி.
கிழவி தொலைவுக்குப் போனது உறுதியானதும்: முத்துராமலிங்கத்தைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட அவள். 'என் உடம்பை எத்தனை மணி நேரத்துக்கு வாடகை பேசி வந்திருக்கிறீர்கள்?'-என்று கடுகடுப்பாக அவனிடம் கேட்டாள். - . . . . -
முதலில் முத்துராமலிங்கம் திகைத்தான். தன்னைப் பற்றி அவளுக்கு எப்படி விளக்குவது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவாறு தட்டுத் தடுமாறி அவளுக்குத் தன்னைப் பற்றிய எல்லாவற்றையும் சொல்வி விவரித்தான். முதலில் குறுக்கிட்டுக் குறுக்கிட்டுப் பேசிய அவள் அப்புறம் மெல்ல மெல்ல அவன் கூறத் தொடங்கியவற்றில் நம்பிக்கை ஏற்பட்டுப் பொறுமையோடு கேட்கலானாள். அவன் தன்னை முற்றிலும் அறிமுகப்படுத்திக் கூறியதும்
அவள் கேட்டாள்: . . . . . . . . . . . . . . . . . .