உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 87

"யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்திற்குள் வரமாட் கடார்களே?' " • . . . . - -

நான் வந்திருக்கிறேன். இன்னும் யோக்கியனாகத் - தான் இருக்கிறேன்.' •

தொடர்ந்து யோக்கியனாக இருக்க விரும்பினால் தயவு செய்து உடனே இங்கிருந்து போய்விடுங்கள்."

-அவள் நிர்த்தாட்சண்யமாகவும், கடுமையாகவும் பேசுவதைப் பார்த்து அவனுக்கு வியப்பாயிருந்தது. அந்தப்

பாடலை மறுபடி ஒரு தடவை பாடுமாறு அவளை வேண் டினான் அவன், -

இப்போ முடியாது! இது இங்கே சங்கீதமே புரியாத மனிதர்கள் கூட்டம் வந்து போகிற வாடிக்கை நேரம். வேண்டுமானால் நாளைக் காலையில் பாடுகிறேன். வந்து கேளுங்கள்" என்றாள் அவள். அவளது பெயரை விசாரித் தான். நளினி என்றாள். பூர்வோத்தரங்களைச் சொல்ல மறுத்து விட்டாள். அவனும் வற்புறுத்தவில்லை, மாடிக்குப் போய்விட்டான். . . . . . . . . .

மறுநாள் காலை சொன்னபடியே, நல்லதோர் வீணை" பாட்டை முழுவதும் அவனுக்காகவே அமுத மழையாகப் பாடிக் காட்டினாள் நளினி. அவனிடம் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசவும் செய்தாள். பேச்சில் விரக்திதான் தொனித்தது. முத்துராமலிங்கத்தைத் தொடர்ந்து இங்கே

தங்க வேண்டாம் என்றும் எச்சரித்தாள் அவள். . . .

பதிலுக்கு அவன் சிரித்தான். சின்னி அன்று மாலைவரை விடுதலையாகி வரவே இல்லை. ஆனால் முத்துராம லிங்கத்தின் உணவு உறையுள் தேவைகள் கவனித்துக் கொள்ளப்பட்டன. . . . - -

இரண்டாம் நாள் நள்ளிரவு கூச்சலும், கூப்பாடுமாகச் சத்தம் கேட்டு அவன் கண் விழித்தபோது வாசலில் நாய் குரைத்தது. ஒரு பெரிய போலீஸ் வேன் வந்து நின்று

கொண்டிருந்தது. - - .