பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நிசப்த சங்கீதம்

கீழ் வீட்டில் போலீஸ் ரெய்டு நடப்பதாகவும், அவன் மாடியிலேயே பதுங்கிக் கொள்ள வேண்டும், என்றும் ஒரு சிறுவன் அவசர அவசரமாக மூச்சிரைக்க மாடிக்கு ஓடிவந்து அவனை எச்சரித்து விட்டுப் போனான்.

12

அந்தச் சிறுவன் வந்து எச்சரித்தபோதுதான் அதுவரை அங்கு தான். உணர்ந்திராத பதற்றத்தையும், பரபரப்பை யும் முத்துராமலிங்கம் உடனடியாக உணர்ந்தான். "யோக்கியர்கள் இந்தக் கட்டிடத்தில் தொடர்ந்து தங்கி யிருக்க முடியாது-கூடாது' என்று அவள்-நளினி எச்சரித்தது. அவனுக்கு நினைவு வந்தது. தொழிற்போட்டி-பகை மைகள் காரணமாகச் சின்னியின் சாராய வியாபாரத்தைக் காட்டிக் கொடுத்ததுபோல இதையும் யாரோ எதிரிகள் போலீசுக்குக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னைப் போல் ஒருவன் எந்தத் தவறும் செய்யாமல் எதற்காக அப்படி அப்போது ஒளிந்திருக் கிறோம் என்று எண்ணியபோது அவனுக்கு மனம்

சமூக அமைப்பில் போலீஸ், சட்டம் எல்லாமே மிகப் பல சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவே தொடர்ந்து பலரைத் தண்டித்துக் கொண்டிருப்பதுபோல் அவனுக்குத் தோன்றியது. . - - கீழே பெண்களின் கூக்குரல்களும் அலறல்களும், ஒடித். துரத்தும காலடி ஓசைகளும், அடைபடும் கதவுகளுமாக ஒரே பரபரப்பு, முத்துராமலிங்கத்துக்கு மனம் தவித்தது. ஒரு பாவமுமறியாத அப்பாவிப் பெண்கள் போலீஸ் ரெய்டில் சிக்கித் தவிக்கும்போது ஆண் பிள்ளையாகிய தான் மாடியில் பாதுகாப்பாகவும் பத்தரமாகவும் பதுங்கிக் கொண்டிருப்பது பேடித்தனம் என்று கருதினான் அவன். அவன் மனச்சாட்சி குமுறி எழுந்தது. . . . . . . . "