உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 9 Ꭵ

"யாரு இருந்தா உனக்கென்னப்பா? உங்கப்பன் இருக்கான் உள்ளார...போப்பா உன் வேலையைப் பார்த்துக்கிட்டு?" -

முத்துராமலிங்கம் அசையாமல் அந்த அறை வாசலி லேயே நின்று கொண்டான். மற்றொரு கான்ஸ்டபிள் ஓடி வந்து, "நீ யாருப்பா இதெல்லாம் கேக்க? இப்ப உன்னையே அரெஸ்ட் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போகப் போறோம்' என்று முத்துராமலிங்கத்தின் சட்டைப்பை, இடுப்பு, எல்லா வற்றையும் சோதனையிட்டு மணிபர்ஸ், சீப்பு, பேனா, கர்சீப் ஆகியவற்றை வெளியே எடுத்தான்.

"நான் இங்கே மாடியிலே தங்கியிருக்கேன். என்னை நீங்க அரெஸ்ட் பண்ண முடியாது; நான் எந்தத் தப்பும் பண்ணலே.' - - -

"அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது? விபச்சாரத் தடைச் சட்டத்தின் கீழ் உன்னைக் கைது செய்யப் போறோம்." - - r . கான்ஸ்டபிள் இப்படித் திமிராகச் சொல்லிக் கொண் டிருந்தபோதே அறைக் கதவு திறக்கப்பட்டது- உள்ளே யிருந்து முகத்தில் முத்து முத்தாக அரும்பிய வேர்வையுடன் யூனிபாரம் எல்லாம்கூட வேர்வையால் நனைந்த கோணத் தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தயக்கத்தோடு வெளியே வந்தார். - . . . . “. .

அறைக்குள் கட்டிவில் அலங்கோலமான நிலையில் அந்தப் பெண் நளினி தென்பட்டாள். முத்துராமலிங்கம் ஒரு விநாடி கூடத் தயங்காமல் கான்ஸ்டேபிள்களைப் பார்த்துச் சொன்னான்: - -

விபசாரத் தடைச் சட்டத்தின் கீழே இங்கே நீங்க யாரையாவது கைது செய்யனும்னா முதல்ல்ே இவரைத் தான் கைது செய்யணும்' என்று சப்-இன்ஸ்பெக்டரைச் சுட்டிக் காட்டினான். அடுத்தகணம் அவன் கன்னத்தில் பளிரென்று ஓர் அறை விழுந் த து. அறைந்தவன் .