பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 93

எதையும் தராமலே பலாத்காரத்தால் பயமுறுத்தித் திருடு கிறான் என்பது புரிந்தது. எஸ். ஐ. முத்துராமலிங்கத்தைச் கட்டிக்காட்டிக் கூறினார்.

"நாம இங்கே ரெய்டு பண்றப்ப விபசாரம் நடந்துக் கிட்டிருந்திச்சுங்கறதுக்கு இந்த ஆள்மேலேயே எஃப்.ஐ.ஆர். போட்டுக்கலாம்.' -- -

- இப்ப்டிக் கூறிவிட்டு முத்துராமலிங்கத்தின் பக்கமாகத் திரும்பி, "யாரிட்டப்பா காது குத்தமே? நீ இங்கே சும்மா தங்கியிருக்கிற ஆளுதான்னா அதை முட்டாள் கூட நம்ப மாட்டானே?.........' - . .

"இப்பிடி ஊர்லே ஒழுங்காயிருக்கிறவங்களை க் கெட்டவங்களா ஆக்க உங்களை மாதிரிப் பத்துப் போலீஸ் காரங்களே போதும்." . ~. . -

'டேய் வாயை மூடு. உன்னைக் கேக்கலே' எஸ்.ஐ, கூப்பாடு போட்டார். குற்றவாளிகளை ஊர்வலமாக அழைத்துப் போவது போல், முத்துராமலிங்கத்தையும் அந்தப் பெண்களையும் தெருவில் நடத்திக் கொண்டு. போய்ப் போலீஸ் லாரியில் ஏற்றியபோது-சாலையில் போவோர் வருவோரும் அக்கம் பக்கத்து வீட்டாரும் கும்ப லாகக் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள். முனு. முணுத்தார்கள். சிரித்தார்கள். அந்தச் சூழ்நிலையிலும் முத்துராமலிங்கம் தலைகுனியவில்லை. -

அடுத்து அவர்களைக் கொண்டு போய் இறக்கிய இடத்தில் முத்துராமலிங்கம் சந்திக்க விரும்பாத-சந்திக்கக் கூடாத ஒருவரை அங்கே சந்திக்கும்படி நேர்ந்து விட்டது. அவன் அங்கே அவரை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அவரும் அவனை அங்கே எதிர்பார்த்திருக்க முடியாதென்றே தோன்றியது. - . . . . .