உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

தந்தை தனக்காக யாருக்குச் சிபாரிசுக் கடிதம் கொடுத். தனுப்பினாரோ அந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் குருசாமி. சேர்வையை மீண்டும் அவன் சந்திக்க தேர்ந்தது. அவர் அவனைப் பார்த்ததும் அடையாளம் புரிந்து கொண்டார். ஆனால் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை. .

அங்கே அவர் விசாரித்ததிலிருந்து குற்றப்பிரிவு, விசாரணை, இம்மார்ல் டிராஃபிக் விவகாரங்கள் அவருடைய பொறுப்பில் இருப்பதாகப் பட்டது. கைது. செய்யப்பட்டு வந்திருந்த பெண்களின் கன்னத்தில் தட்டுவது, தோளில் கையை வைத்துப்பேசுவது போன்ற செயல்களால் அவரும் யோக்கியரில்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஒரே ஒரு பெண்ணை லாக்கப்பில் தள்ளி அவரும் உள்ளே போய்விட்டு வந்தார். பிடித்து வந்த பெண்களையும் முத்துராமலிங்கத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் அல்லது வேண்டுமென்றே. சாப்பிடக்கூட வழி செய்யாமல் பட்டினி போட்டிருந். தார்கள். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. -

இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இப்படி 'ரெய்டு நடத்துவது போல் பாசாங்கு செய்வதும் விட்டு: விடுவதும் வழக்கம் என்று உடன் இருந்த பெண்களில் ஒருத்தி முத்துராமலிங்கத்திடம் கூறினாள். அந்த ஒரு. விபசார விடுதியில் மட்டுமல்லாமல் நகரின் வேறு விபசார விடுதிகளிலும் இவர்களுக்கு மாமூலாக ஒரு கப்பம் கட்டி வருவதுண்டு என்றாள். அவள். - .. -

சட்டத்தால் தடுக்கப்படும் கள்ளச் சாராயம், சட்டத் தால் தடுக்கப்படும் விபசாரம் எல்லாவற்றையும் "முதலீடாக வைத்தே சட்டத்தின் பாதுகாவலர்கள் சம்பாதிக்கவும் முயலுகிறார்கள் என்பதை அறிந்தபோது அவனுக்கு ஆச்சரியமாகக்கூட இருந்தது. மாடியில் ஒளிந்து கொள்ளும்படி வேண்டப்பட்டிருந்த தான் துனலும் தன்