Д5т. பார்த்தசாரதி 9苏
வாயால் கெடும் என்பது போல் வலுவில், போலிஸிடம் வந்து சிக்கி ஒரு குற்றமும் செய்யாமலே தண்டனை அநுப விப்பது ஒரு விதத்தில் பலவற்றின் குரூரமான உண்மை முகங்களைத் தெரிந்து கொள்ளப் பயன்படும் என்றே அவனுக்குத் தோன்றியது. அநுபவங்களையும், அநுபவங் களிலிருந்தும் கற்க நேர்கிற இந்த வாய்ப்பை அவன் விரும்பினான்.
பொது மக்கள் தவறுகளைச் செய்து விடக்கூடாது என்பதைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்படும் ஒவ்வோர். அதிகாரமும், நிர்வாகமுமே தவறுகளைத் துணிந்து செய்யத் தொடங்குவது தான் ஊழலின் முகத்துவாரம் என்று. அவனால் இப்போது உணர முடிந்தது.
இரவு பதினொன்றரை மணிக்குமேல் சின்னி யாரோ ஒரு பெரிய அரசியல் பிரமுகரோடு அங்கே வந்தான். அவர் கள் அதிகாரிகளோடு பேசினார்கள். அரை மணி நேரத்தில் பெண்களையும், முத்துராமலிங்கத்தையும் விடுவித்து: அழைத்துக்கொண்டு செல்ல அவனால் முடிந்தது,
"நீ எப்போ விடுதலையாகி வந்தே? உன்னைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டதாகச் சொன்னாங்களே?' என்று சின்னியைக் கேட்டான் முத்துராமலிங்கம்.
எல்லாம் அப்புறமாகச் சொல்றேன்" என்று சின்னி யிடமிருந்து சுருக்கமாகப் பதில் வந்தது. அவனது முழங் கையில் கட்டுப் போட்டுக் கழுத்தில் முடிந்திருந்த கோலம் கலவரத்தில் அவன் அடைந்த பரிசாக இருக்க வேண்டு. மென்று தோன்றியது. சின்னியோடுகூட அரசியல் பிரமுகரும் இருந்தாலும் அவரைக் கடைசிவரை முத்து ராமலிங்கத்துக்கு அவன் அறிமுகம் செய்து வைக்க வில்லை, .
கொலைகாரன்பேட்டை பங்களா முகப்புக்கு வந்ததும், 'இவளை நீங்க இட்டுக்கினு போங்க...காலம்பர அனுப்பி வைங்க.போறும்' என்று சிரித்தபடி கூறிய சின்னி'