பக்கம்:நிதர்சனங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் . 1 .இ

இத் திருக் கூட்டத்தினர் தாம் கடவுள்கள்’ என்ற பாடத்தை அந்த எம். எல். ஏ. அறிந்திருப்பாரோ என்னவோ?

‘பே போ! ..., கைத் தறிக்காரங்க தொல்லை வர வரப் பெரி சாப் போயிடு ச்சே .போ போ!’ என்று சொல்வி விட்டு, படாரென்று அந்தர் த் தியானம்” ஆகிவிட்டார் அந்த ஐந்து ஏக்கர் தியாகி!-இந்தப் பக்தனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் இந்திர ஜாலத்தைக் கற்துக் கொடுத்தது எந்தக் கடவுள ம்?

ஒரு பாட்டம் அழுதான்; அழுதான்; அப்படி அழு தான். நல்ல வேளை, அழுகையாவது அவன் கூப்பிட்ட குரலுக்கு வந்ததே!

வேலையணின் கையில் தவழ்ந்திருந்த அந்து நாலு கைத் தறி வேட்டிகளிலும் அவன் சொரிந்த வறுமை ச் சின்னங்கள் முத்துப் பதித் திருந்தன. இந்த வேஷ டி. களை நெய்து முடிப்பதற்குள் வேலையனும் அவன் மனைவியும் எத்தனை பாடு பட்டார்கள்? அன்று நடுச்சா மத்தில் அகல் விளக்கு எண்ணெய் இன்றி அனைந்து போக, தெரு விளக்கில் தறிக்குரிய நா டா, தார்க்குச்சி, திருவட்டம், படை மரம் முதலிய சாமான்களுடன் டேரா போட்டு விடிய விடிய விழித் திருந்து வேஷ்டியை நெய்து முடித்ததை அவன் எப்படி மறப்பா ன் ?

“அத் தான், நம்ப குழந்தைகள் ரொம்ப கிறங்கிப் .ே ப ா யி டு ச் சு ங் க. இதை நினைக்கிறப்போதான் பெற்ற வயிறு வெடிச் சுடும் போலிருக்குது. எப்பாடு பாட்டா ச்சும் இந்த இரண்டு ஜோடி வேஷ்டியையும் பணம் பண்ணிகிட்டு வந்து டுங்க... கடன் வாங்கின நூல் சிட்டத்துக்கு வேறே ப ண ம் கட்டணும்...... நம்ப செல்வங்களுக்கு தீபாளிக்காச்சும் வயிறு நிரம்பக் கூளு காச்சி ஊத்த வேணாமா? --கேள்விக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/129&oldid=680925" இலிருந்து மீள்விக்கப்பட்டது