பக்கம்:நிதர்சனங்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 செந்தாழ ம் பூ

காலம் ஒரு நாடோ டி: நானும் நாடோடி யானேன். என் கண்கள் என் அழகுப் பது ைமயைக் காட்டவே யில்லை. நான் செய்த பாவம் என்ன? பாவ மாம், பாவம்... !

ஒரு நாள் எனக்கு இந்த ஊரில் தான் உதயம் மடல விழ்ந்தது. நான் கண்களை மலரத் திறந்தேன். என் முன் அம்பிகை மஹேஸ்வரியின் திருச் சந்நிதி தோன்றியது. கரங்கூப்பினேன்; சிரம் வணங்கினேன். ‘ரஞ்சிதத்தை எனக் குத் தா!’ என்று நெஞ்சுருகப் பிரார்த்தி த்தேன். அவள் தான் கல்லென்றிருந்தேன்; அவளது இதயமும் கல்லாகத் தான் இருந்தது!

திரும்பினேன். சுற்றுப் பிரகாரத்தின் முகப்பு மூளியாகக் காட்சியளித்தது! எழுதப்பட்டிருந்த சித்திரம் தேய்ந்து அழிந்து மறைந்து போயிருந்தது. அது அந்த அம்பிகையின் திரு உருவென்று சொன்னது என் கற்பனை.

‘ஆஹா, உலகமா தாவின் அருள் பாலித்து விட்டது!’ என்ற சத்தம் கேட்டுத் திரும் பினேன்.

சிவப்பழம் ஒன்றைத் தரிசித்தேன்.

  • வணக்கம்: ‘
  • வணக்கம்!'”

‘அம்பிகைதான் உங்களை இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ஏன், அப்படித் தானே ஐயா?” ‘Tr, 675 gr - ஜீவன் ரஞ்சிதம் இங்கே தான் இருக்கிறாளோ?...”

“ரஞ்சித மா?...ஐயா, முதலில் இந்தலோகத் துக்கு வாருங்கள். இதோ, இந்த இடம் சூன்யமாயிருக்கிற தல்லவா? இங்கு தான் அம்பிகை மஹே ஸ்வரியின் ஒவியம் தீட்டப்பட்டிருந்தது. அது கால வெள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/156&oldid=680955" இலிருந்து மீள்விக்கப்பட்டது