பக்கம்:நிதர்சனங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48 செந் தாழம் பூ

அந்தச் சிரிப்புக்கு ஈடு ஏது? அந்தச் சிரிப்பைப் படத்தில் நான் எப்படி எழுதப் போகிறேன்...?

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத் தில் நிலை காணுங்கால்,

புல்லினில் வயிரப்படை காணுங்கால்,

பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!

பாரதியின் கவிச்சொல் கேட்டேன். நான் என்னை மறந்தேன். * .

விடிந்தது.

“மஹேஸ்வரியைப் படைத்து விட்டேன்-புவனம் காக்கும் புனிதத் தாயைப் படைத்து விட்டேன்தெய்வத்தை மனிதன் படைத்து விட்டான்-இந்த குணசீலன் படைத் து விட்டேன்! ஹ ஹ் ஹா! இனி, எனக்கு என் ரஞ்சிதம் கிடைத்து விடுவாள்!...”

மெய்யன்பர் வந்தார். மஹேஸ்வரியைத் தரிசியுங்கள். ஐயா!’ பக்திப்பரவசம் துரை கக்கும் அவருடைய கண் கன் சுவர் நாடி ஒடி நிலைத் தன.

ஐயோ!’ என்று கூக்குரலிட்டார் கோயில்

தர்மகர்த்தர்.

  • பெரியவரே...’

“வாயை மூடு. மீறி உன் வாயைத் திறந்தால், அம்பிகை உன் வாயை அடைத்து விடுவாள்.

மஹேஸ்வரியை வரையச் சொன்னால், ஊர் சுற்றும் தேவடியாளைப் படம் எழுதியிருக்கிறாயே?... அருள் மாதாவின் அந்தப் புனிதச் சிரிப்பு எங்கே? இந்தத் தாசியின் போதைச் சிரிப்பு எங்கே...? பெண் குலத் துக்கே சாபக் கேடான இந்தத் தாசியின் உருவத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/158&oldid=680957" இலிருந்து மீள்விக்கப்பட்டது