பக்கம்:நிதர்சனங்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

பூவை எஸ். ஆறு முகம் 83

வந்த வழியில் ஏ. காந்த சொரூபிணியாகக் காட்சி தந்த மகமாயித் தாய்க்கு ஒரு கும் பிடு போட்டார் செட்டியார். மாமூல் காணிக்கை இது. நடுங்கிய ைகவிரல்களால் விபூதியையும் குங்கு மத்தையும் ஒரு சேர அள்ளி நெற்றியில் அப் பிக்கொண்டார், முன் நெற்றியில் அலைந்து கிடந்த வெண்கேசத்தைப் பின் வசமாகக் கோதி விட்டவராக நடை தொடர்ந் தார். கும் பிடு கொடுத்துக் கும் பிடு வாங்கிக் கொண் டபடி, புன் ன கையும் தாமுமாக மண்டியின் படிக் கட்டில் வந்து நின்றவரின் பார்வை கல்லாவில் நிலைத் தது. -

  • கணக்கப்பிள்ளை ஐயா, எங்கே வேலாயுதம்?’s
  • வெளியிலே போயிட்டு வர்ற தாச் சொல் லிட்டுப் போனான் கொஞ்ச மு ந் தி, வந்தி டு வானுங்க.”

“ஓ! சரி. நீங்க எந்திருங்க. நான் கல்லாவிலே உட் காருகிறேன்’ என்று சொன்னார் முத்துராமன். சூழ்ந்துகொள்ளும் பரபரப்பைச் சமாளித்துப் பழகி யவை ஆயிற்றே அந்தக் கைகள்.

சேட் தொலைபேசியில் கண்டித்துச் சொன்ன தாக்கலையும் கணக்குப்பிள்ளை வெளியிட மறந்து விடவில்லை.

‘அப்படியா? வழியிலே பார்த்தேன் சேட் ஜியை. வட்டி வேணாமாம். அவருக்கு; அசல் வேணு மாம். அந்தக் கணக்கைக் குறியுங்க,நேற்றுச் சொன்னேனே, அந்த லிஸ்ட்டைத் தயாராக்கிட்டீங்களில்லையா?” என்று வினவினார் செட்டியார்.

“ஆமாங்க’ என்றார் கணக்கர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/193&oldid=680996" இலிருந்து மீள்விக்கப்பட்டது