பக்கம்:நிதர்சனங்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F & 8 கல்லா

“அதிகப் பற்று வந்திடாமல் பார்த்துக்கிடனு: மப்பா” என்றார் செட்டியார்.

‘ வராதுங்க!”

“சந்தர்ப்பங்க நமக்கு எப்பவுமே அதுசரணை யாக இருக்க முடியா தில்லையா? அதனால் தான் இப்படிப் புது ஷரத்து வச்சுச் சொல்ல வேண்டி யிருக்கு.”

‘சரிங்க, எஜமான்!”

செட்டியாரின் கண் நோக்கு பெட்டியடியில் நிலைபெற்றது, இப்போது.

‘பிஸினஸ் கூட டல் ஆகிக்கினு வருதுங்க, ஐயா!’

“அப்படியா? கண்டச் சனி. தப்பிக்கிறது சுலப மில்லை. பகவானே! வழக்கம் போலவே இப் போதுங்கூட அந்தப் புன்னகை விதியாக விளைந்தது.

மண்டி க்கும் ஒய்வு வேண்டாமா?

உல்கத்தின் நெற்றித் திட்டில் நெற்றிப் பொட் டாக ஊசலாடிய நாள் காட்டியின் சில தாள் களைக் கபளிகரம் செய்தது காலம்.

‘மீனாட்சி விலாசம் அன்று இளங் காலைப் பொழி தில் உயிர்க் கழுவில் ஊசலாடித் தவித்தது.

மெ. முத்துராமன் செட்டியார் மட்டும் தமக்கே உரிய அந்த அழகான புன் சிரிப்புத் தவழ யூ.போம்” திண்டில் சாய்ந்தவண்ணம் இருத்தார்,

முனியுங்கவரா அவர்?

இல்லை, கர்மயோ கி.ா?

இல்லை, அவர் சாட் சாத் மேனா-முனா செட்டி யார் தாமே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/196&oldid=680999" இலிருந்து மீள்விக்கப்பட்டது