பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 கித்திலக் கட்டுரைகள் ஒழியக் கடன் காாணமாகவோ, முன் கோபத்தாலோ, பிணியின் கொடுமையாலோ மற்றும் பல்வேறு காரணங்களாலோ தற்கொலை புரிந்து கொள்ள முயல் பவர்களை வள்ளுவர் பாராட்டவேயில்லை. வேலஞர் : மானம் என்பதின் பொருள் எனக்கு இப்போதுதான் நன்கு விளங்குகின்றது. நாதனர் : மானம் அழிந்த பின் உயிர் விடுதலை விட மானம் அழியாதிருக்க முயலுதலே சிறந்தது என் பதை விளக்கிக் காட்டுதற்காகவே வள்ளுவர் மானம் என்னும் மாண்புடை அதிகாரத்தை வகுத்துக் கூறி யிருக்கின் ருர். உயிரைப் போக்கிக் கொள்ளுதல் வேண்டும் என்பது அவர் கருத்தன்று. இவ்விதமே திருக்குறளிலே நமக்கு முரண்பாடு போல் தோன்றும் பல பகுதிகளை நாம் பன்முறை ஊன்றிக் கவனித்தல் வேண்டும். இவ்விதம் அவர்கள் பலப் பல பேசி அன்றைய ஓய்வு நாளினைக் கழித்தனர்.