O6 கித்திலக் கட்டுரைகள் அந்தக் காலத் தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் புராணப் பிரசங்கமே செய்வார்கள். அவர்கள் அவை யடக்கத்திற்கே அரைமணி நேரம் எடுத்துக் கொள்வார் கள். பேசும்போதும் கிளைக்கதைகளும், புராணப் பாடல் களுமே அவர்கள் பேச்சில் கலந்திருக்கும். மறைமலை அடிகளார் அவர்கள் பேச்சோ அந்தக் காலத் திலேயே ஆங்கிலேயர் முறையைப் பின்பற்றியதாகவே இருக்கும். தாம் பேச எடுத்துக்கொண்ட பொருளைப் பேச வேண்டிய காலத்திற்குத் தக்க வண்ணம் பகுதி பகுதி யாக வகுத்துக்கொண்டு கேட்போர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மையில் பலப்பல எடுத்துக் காட்டுக் களுடன் விளக்கிக் கூறி முடிவில் தாம் பேசிய பேச்சின் சுருக்கத்தினையும் தொகுத்துக்கூறி முடிப்பது அந்தக் காலத்திலே எங்களுக்கெல்லாம் மிகவும் புதுமையாகவே இருந்தது. அவர் தம் பேச்சில் சிவஞானபோதக் கருத்துக்கள், மேல் நாட்டவரின் எண்ணங்கள், சங்க கால நூற்களில் மிளிரும் தமிழர் பண்பாடுகள், வட மொழியில் உள்ள உபநிடதப் பொருள்கள் யாவும் கலந்திருக்கும். அவர்தம் பேச்சுக்களைக் கேட்டே பல புலவர்கள் தங்கள் பேச்சினை மாற்றிக் கொண்டார்கள். அழகிய செந்தமிழ் நடையில் கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டியாக இருந்தவரும் அவரேயாவார். அவர் நடத்திக் காட்டிய சைவ சித்தாந்த சமாசத்தைப் பின் பற்றியே பல அறிஞர்கள் சபைகளையும் கழகங்களையும் ம்ேல் நாட்டுமுறைப்படி சட்டதிட்டங்களோடு நடத்தத் துவங்கினர். இன்னும் அவரைப்பற்றி விரிவாகக் கூற
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/102
Appearance