மறைமலை அடிகளும் நானும் 10 I பெற்ற நிறுத்தலளவைகளையும் வைத்துக்கொண்டு அவைகளை ஒவ்வொன்ருக நிறுத்துப் பார்த்து முடிவில் * எல்லாம் சரியாக இருக்கின்றன. நீங்கள் போகலாம்.' என்ருர், அந்தச் செயல் எங்களுக்கு மேலும் ஏமாற் றத்தையே அளித்தது. பிறகு எவ்விதமோ வீடு வந்து சேர்ந்து அடிகளாரின் செயல்களை எங்கள் ஆசிரியரி டம் கூறினுேம். அப்போதும் அவர் அடிகளாரைப் பற்றி உயர் வாகவே கூறினர். அடிகளாருக்கு உலக இயல் தெரியாததே காரணம் என்றும் உங்களை யாரோ அயலார் என்று எ ண்ணிக் கொண்டார் என்றும் நீங் கள் உங்களைப் பற்றித் தெரிவித்துக் கொள்ளாததல்ை தான் இத்தகைய தவறு நேர்ந்தது என்றும் அவர் கூறினர். இரண்டொரு நாட்களுக்குள் எங்கள் ஆசிரியரின் கால் நோய் குணமடைந்து விட்டது. அவர் உடனே பல்லாவரம் சென்று " இரண்டு படித்த புலவர்கள் நல்ல வெயிலில் உங்களுக்காக இரண்டு மூட்டைகளைச் சுமந்து கொண்டு வந்தால் அவர்களை இவ்விதம் நீங் கள் மரியாதைக் குறைவாக நடத்தலாமா?" என்றுமிகத் தைரியமாகக் கூறினர். எங்கள் ஆசிரியர் சொன்ன சொற்கள் அவர் உள் ளத்தைப் பெரிதும் வருத்தி விட்டன. அவர் பெரிதும் வருந்தினர். "நான் என்ன தவறு செய்துவிட்டேன். திருநாவுக்கரசு அந்த இரண்டு இளைஞர்களையும் உடனே அனுப்பிவை. அவர்களுக்கு நான் ஆறுதல் உரைகூறி அவர்களே மகிழ்விக்கவேண்டும்,” என்ருராம். எங்கள் ஆசிரியர் அடுத்த நாளே வேறு ஒரு காரணத்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/107
Appearance