உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கித்திலக் கட்டுரைகள் தைக்கூறி இரண்டு புத்தகங்களை எங்களிடம் கொடுத்து, இவை அடிகளாருக்கு அவசியம் வேண்டுமாம்; உங்கள் இருவரையும் நேரில் கண்டு பேச வேண் டும் என்று கூட விரும்புகின்ருர். ஆதலால் நீங்கள் இருவரும் எனக்காகவேனும் சென்று வருதல் வேண் டும், என்று தெரிவித்தார். எங்கள் ஆசிரியரின் சொல்லைத் தட்டுவதற்கு எண்ணுமல் நாங்கள் அவ் விதமே சென்ருேம். அப்போது மாலை நேரம். எங் களைக் கண்டதும் அடிகளார் மிகவும் அருமையோடு பெயர் சொல்லி அழைத்துத் தம் அருகே உட்கார வைத்துக் கொண்டு ஏதேதோ பேச ஆரம்பித்தார். உடனே அவர்தம் வாழ்க்கைத் துணைவியாரை அழைத்து எங்களுக்குச் சிற்றுண்டி பரிமாறினர்" அன்று இரவும் நாங்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்று எங்களை வற்புறுத்தினர். தாம் பழக்கமாகப் புரியும் யோகப் பயிற்சி, முதலியவைகளையெல்லாம் எங்களுக்கு விளக்கிக் கூறி நேரில் செய்து காட்டினர். அன்று இரவு நர்ங்கள் உணவு கொள்ளும் போது அவரே அருகிருந்து அந்தக் கறிவகைகளின் சிறப்புக் களையெல் லாம் எங்களுக்கு விளக்கிக் கூறினர். அந்தக் கறி வகைகள் நல்ல நெய்யில்ை தாளிக்கப் பெற்றிருந் தன. எலுமிச்சம் பழத்தின் சாற்றினல் குழம்பு இரசம் முதலியவை தயாரிக்கப் பெற்றிருந்தன. அன்று இரவெல்லாம் நாங்கள் உறங்கவேயில்லை. இரவு 12 மணிக்கு மேல் அவர் உலா வச் சென்ருர். அப்போது கூட அவர் எங்களையும் அழைத்துச் சென்ருர், அன்றைய தினத்திலிருந்து இறுதிக்காலம் வரை யிலே அவர் என்னிடம் காட்டி வந்த பேரன் பினை நான்