பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலை அடிகளும் கானும் 108 எவ்விதம் விளக்கிக் கூறுவேன். எங்கள் ஆசிரியர் இறந்த பின்பும் அவர் ஒருநாள் என்னையும் பாரிப்பாக் கம் கண்ணப்ப முதலியார் அவர்களையும் தம் இல்லத் துக்கு அழைத்துச்சென்று, திருநாவுக்கரசு இறந்ததற் காக நீங்கள் வருந்தவேண்டாம் ; நான் இருக்கின் றேன். உங்களுக்கு வேண்டிய உதவிகளை யெல்லாம் நான் செய்வேன். உங்களுக்கு என்ன வேண்டு. மானலும் என்னிடம் சொல்லுங்கள் , என்று கூறினர். "நீங்கள் எழுதும் புத்தகங்களை நீங்களே அச் சிட்டு விற்க முயலுங்கள். முதன் முதலில் நான் என் நூலை அச்சிட முயன்றபோது என்னிடம் போதிய பொருளே இல்லை. கிறித்தவக் கல்லூரியிலே கிடைத்த அந்தக்குறைந்த ஊதியத்திலும் சிறிதுசிறிதாகச் சேமித் துப் பகுதி பகுதியாக அச்சிட்டு முடிவில் முழு நூலாக ஆக்கினேன்," - என்றெல்லாம் அவர் மிக விரிவாகக் கூறினர். அவர் சங்க நூல்களையும் ஆங்கில நூல்களை யும் நெட்டுருப் போட்ட செய்திகளை யெல்லாம் கூட எங்களுக்கு விளக்கமாகக் கூறியிருக்கின்ருர். அவர் இறப்பதற்கு ஒரு வாரம் இருக்கும் போது என் தமக்கை யார் மலர்முகத்தம்மையாரும், டாக்டர் தருமாம்பாள் அம்மையாரும் அவர்களைக் காணச் சென்ருர்கள். அந்த நிலையிலே கூட, முத்துக்குமாரசாமி எங்கே வருவதே இல்லை ! நான் அவரைப் பார்க்க வேண்டும். உடனே வரச் சொல்லுங்கள் !" என்று கூறினராம். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எங்களையெல்லாம் விட்டு மறைந்து விடுவார் என்று நான் சிறிதும் எண்ணவே இல்லை. தாம் நெடுங்காலம் இவ்வுலகில் இருந்து மேலும் பலப்பல அரிய செய்திகளையெல்லாம் உல