பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கித்திலக் கட்டுரைகள் புராணத்தில் இதே சந்த அமைப்பில் எறிபத்த நாய ர்ை இறைவனை நோக்கி வருந்தும் பகுதியில் ஐந்து பாடல்கள் அமைத்திருக்கின்ருர், இரண்டொன்று வருமாறு :

  • களியா னேயின் ஈர் உரியாய் சிவதா எளியார் வலியாம் இறைவா சிவதா அளியார் அடியார் அறிவே சிவதா தெளிவார் அமுதே சிவதா சிவதா’’ ‘' ஆறும் மதியும் அணியும் சடைமேல் ஏறும் மலரைக் கரிசிங் துவதோ வேறும் நினைவார் புரம்வெக் தவியச் சீறும் சிலையாய் சிவதா சிவதா.’’ தேவாரத்தில் வரும் பலப்பல சீர் அமைப்புகளை யும், சந்த அமைப்பினையும் சேக்கிழாரும், கம்பரும் பிற ஆசிரியர்களும் எடுத்தாண்டிருப்பதைத் தமிழ் இளை ஞர்கள் ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்.

தேவாரத் திருமுறைகளில் காணப்பெறும் அழகிய வர்ணனைகளையும், அரிய கருத்துக்களையும் இந்தச் சிறிய கட்டுரையில் எடுத்துக்காட்டுதல் சிறிதும் இய லாத செயலே ஆகும். தேவார ஆசிரியர்கள் தம் பாடல்களில் வெறும் வர்ணனைகளை மட்டும் அமைத்துப் பாடாமல் அந்த வர்ணனையுள்ளும், உள்ளுறை உவமம், இறைச்சி முத லிய தொனிப்பொருள் அமையப் பாடுதலே அவர்கள் இயல்பு. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். திருமுது குன்றக்காட்டில் வாழும் வேடர்கள் மான், மயில் முதலிய உயிர்களைக் கொன்று தின்று வாழ்க்கை நடத்துவார்கள். அவர்கள் பகலெல்லாம் வேட்டை