தேவாரமும் ஓர் இலக்கியமே 111 யாடித் தம் ஊருக்குத் திரும்பும் போது முதுகுன்றக் கடவுளைத் தொழுது செல்கின்ருர்கள். அவர்கள் தொழு வதைக் கண்டு அருகேயிருந்த முல்லைக்கொடி புன்னகை செய்ததாம். ' கொல்லை வேடர் கடடி கின்று கும்பிட முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.” (சம்பந்தர் தேவாரம்) இந்தக் காலத்திலும் ஒரு சில வணிகர்கள் பகல் முழுதும் மக்களை ஏமாற்றி வாணிகம் செய்து மாலையில் முருகனுக்குத் திருவிழாக் கொண்டாடும்போது நாமும் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்வதுபோல, அந்த முல்லைக்கொடியும் மாலையில் தன் முல்லை மலரை அரும்பச்செய்தது, அந்த வேடர் தம் அறி யாமையை நினைத்து முறுவல் செய்வதாக உட் பொருள் ஒன்றினையும் இந்த ஆசிரியர் அமைத்துப் பாடியிக்கிருர், சங்ககாலக் கருத்துக்களையும் தேவாரத் திருமுறை யில் நாம் கண்டு மகிழலாம். எடுத்துக்காட்டாக இரண் டொன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்குறள் கருத்துக் களைப் பல இடங்களில் எடுத்தாளுகின்ருர். அவை வருமாறு.
- பொறிவாயில் இவ்வைந்தினையும் அவிய * { பிறவிப் பெருங்கடல் நீங்தி ஏறி ’’ " அகரம் முதலின் எழுத்தாகி ' * உறங்கி விழித்தால் ஒக்கும் பிறவி * -