பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரமும் ஓர் இலக்கியமே 113 பொருள் இருக்கும் என்று எண்ணி எண்ணிப் பார்த் தும் அறிய முடியாதிருந்தேன். அந்த ஊருக்குச் சென்றபோது இரண்டு சிவலிங்கம் ஒன்ருக இருத்தலைக் கண்டு இங்கே இரண்டு இலிங்கங்கள் ஏன் இருக் கின்றன. என்று கோயில் குருக்களை வினவினேன். அவர் உடனே இரண்டுருவாய அடிகள்' என்னும்' அடியினைப் பாடிக் காட்டினர். சேக்கிழாரைப் போலத் தேவார ஆசிரியர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். அன்றியும் ஞானசம்பந்தர் “வாழ்க அத்தனர்” என்னும் அடியினையுடைய பதிகத்தில் ஏழாம் பாடலில் சண்டே சுரர் சரிதையைக் குறிப்பிடும்போது 'படிசேர்ந்த பால் கொண்டங்கு ஆட்டிடத் தாதை பண்டு, முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி, அடிசேர்ந்த விண்ணம் அறிவார் சொலக்கேட்டும் அன்றே" என்று பாடியிருத்தலால் சம்பந்தர், அப்பர் முதலியவர்கள் திருப்பதிகள் தோறும் சென்றபோது அங்காங்கே உள்ள அரிய செய்திகளைக் கேட்டறிந்தும் தம் திருப் பாடல்களில் அமைந்திருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது. இத்தகைய உயரிய தமிழ்மறையில் இன்னும் எவவளவோ அரிய செய்திகள் அடங்கியிருக்கின்றன. அவைகளை எல்லாம் இளைஞர்கள் ஊன்றிக் கற்றும் ஆய்ந்துபார்த்தும் அகமகிழ்வார்களாக.