உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வாங்கு வாழுதற்கு அறநூல்களில் வகுத் துள்ள வண்ணம் ஒழுக முயல்வதோடு நம் முன்னேர் தம் வாழ்க்கை நெறிகளை அறிந்து அவற்றுக்கு ஏற்ற வண்ணம் ஒழுக முயல்வதே சாலச் சிறப்புடைத்து. நம் முன்னேர்களுள் சங்க காலப் புலவர்கள் வாழ்ந்து காட்டியுள்ள ஒழுக்க நெறியே நாம் அனைவரும் பின் பற்றி ஒழுக வல்ல சிறப்புடைத்தாய வாழ்க்கை நெறி யாக அமைந்துள்ளது. சங்க காலப் புலவர்கள் தம் இளம் பருவ வாழ்க்கை வரலாறுகளையோ, அவர்கள் கல்வி கற்ற முறை யினையோ அவர்கள் பேரும் புகழும் பெற்றுச் சிறந்த வழி வகைகளையோ, அவர் தம் அன்ருட வாழ்க்கை நெறிகளையோ நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள _ இயலவில்லை. எனினும் பத்துப்பாட்டு, எட்டுத் _ ஒருவாறு அப்புலவர்கள் தம் சிறப்பியல்புகளை நாம் அறிந்து கொண்டு நமக்கு ஏற்ற வகையில் நாம் வாழ முயலுதல் கூடும். சங்க காலப் புலவர்கள் பழியஞ்சிப் பகுத்துண்டு வாழ்தல், தமக்கென வாழாது பொதுநலம் போற்றி