உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வாழ்க்கை 115 வாழ்தல், அழுக்காறின்மையை ஒழுக்காருகக் கொள்ளு தல், தவறு கண்டவிடத்துச் சிறிதும் அஞ்சாது எடுத் துரைத்தல், இளிவரின் வாழாத உள்ளமுடையோராய் இருத்தல் முதலிய பலப்பல உயரிய பண்புகளையெல் லாம் பெற்றிருந்தமையை அவர்தம் செய்யுட்களி லிருந்தே நாம் அறிந்து கொள்ளுதல் கூடும். ஆற்றுப்படை என்னும் இலக்கணம் அமைந்த நூல்களை அக்காலப் புலவர்கள் இயற்றி யிருத்தலைக் கொண்டு பொருள் பெற்ருர் ஒருவர், பொருள் பெருது வருந்தும் பிறிதொரு புலவருக்கும் பொருள் பெறும் வழி கூறும் உள்ள ம் வாய்ந்தவர் அக்காலப் புலவர்கள் என்பது நன்கு புலனுகிறது. 'உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்ச்லும் இலர் ; பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் ; பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளலர் ; அயர் விலர் ; அன்ன மாட்சி அனய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுங்ார் உண்மை யானே’’ இச் செய்யுளை இயற்றியவர் இளம்பெரு வழுதி என்னும் ஒரு மன்னராக இருப்பினும், அவர் பெரும் புலவர் வரிசையில் சேர்க்கப்பட்டு இருத்தலாலும் இச் செய்யுளில் பொதிந்துள்ள பொருள்கள் அக்காலப் பெருமக்கட்கு ஏற்ற குணங்களாக அமைந்திருத்தலை அவரே கூறுதலாலும், அக்காலத்து இத்தகைய பெரு மக்கள் இருந்தனர் என்பது தெரிய வருகிறது.