பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கித்திலக் கட்டுரைகள் இந்திரர்க்கு உரிய அமிழ்தம் கிடைப்பதாயினும் அக்காலப் பெருமக்கள் தனித்து உண்ணமாட்டார் என்பதும், எவரோடும் வெறுப்பு என்பது சிறிதும் இல்லாதவர் என்பதும், பிறர் அஞ்சத் தகும் துன்பத் துக்குத் தாமும் அஞ்சி, அது தீர்த்தற் பொருட்டு முய லாது இருத்தலும் இலர் என்பதும், புகழுக்காகத் தம் உயிரையும் கொடுக்க முன் வருவர் என்பதும், பழி வரும் எனில் உலக முழுவதும் பெறினும் கொள்ளார் என்பதும், எக்காலத்தும் உள்ளம் தவருதவர்கள் என் பதும், தமக்கென வாழாது பிறர் பொருட்டே வாழும் இயல்புடையவர்கள் என்பதும் இச்செய்யுளால் நன்கு புலப்படுவதால் சங்ககாலப் பெருமக்கள் எவ்வாறு தம் வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்பது தெளிவாகும். சங்க காலப் புலவர்களுள் பெரும்பாலோர் எளிய வாழ்க்கையையே நடத்தி வந்திருக்கின்றனர். அவர் கள் தங்கள் வாழ்க்கையைப் பொது நலத்துக்காகவே பயன்படுத்தி வந்தனர் என்பதையும், பலப் பல ஊர் களுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்குக் கல்வியின் சிறப்பினையும் அறநெறி வாழ்க்கையின் முறையினையும் அவர்கள் உள்ளம் உவக்குமாறு எடுத்துக் கூறி வந்த னர் என்பதையும் 'உவப்பத் தலைக் கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’’. 'யாதானு நாடாமால் ஊராமால் என்னுெருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.” என்னும் இவ்விரண்டு அரிய குறட்பாக்களைக் கொண்டே நன்கு அறிந்து கொள்ளலாம். அன்றியும்