பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வாழ்க்கை 117 அவர்கள் இன்பிலும் துன்பிலும் ஒரே தன்மையினராய் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதற்குக் கணியன் பூங்குன்றனர் யாது மூரே யாவருங் கேளிர் தீதும் கன்றும் பிறர்தர வாரா கோதலுங் தணிதலு மவற்ருே ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே...... என்று பாடியுள்ள அடிகளே நமக்குப் போதிய சான்று பகரும. அக்காலத்திலிருந்த அரசர்களும் அந்தப் புலவர் களை மிகவும் சிறப்பாகவே நடத்தி வந்திருக்கிருர்கள். புலவர்கள் வந்தால் அவர்களைத் தமக்குச் சமமாகக் கருதி எதிர் கொண்டழைத்து அருமையோடு உபசரித் திருக்கின்றனர். பிட்டங் கொற்றன் என்னும்_சிற் றரசன் தன்னைக் காண வந்த கதப்பிள்ளை சாத்தனர் என்னும் புலவருக்குப் பெரிய தலை வாழையிலையை யிட்டுப் பல வகைப்பட்ட இனிய உணவுகளை எல்லாம் அன்போடு பரிமாறித் தானும் அந்த இலையிலேயே உடனிருந்து உண்டதாகத் தெரிவிக்கும் புறப்பாட்டு அந்தப் புலவரிடத்திலே அவர் எவ்வளவு பேரன்பு காட்டினர் என்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்றது. சிறிய கட் பெறினே எமக்கீயு மன்னே பெரிய கட் பெறினே யாம் பாடத் தான் மகிழ்க் துண்ணு மன்னே சிறு சோற்ருனு கணிபல கலத்தன் மன்னே பெருஞ் சோற்ருனு கணிபல கலத்தன் மன்னே என் பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயுமன்னே 8