பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கித்திலக் கட்டுரைகள் செய்வாயாக. அவ்விதம் செய்வாயானல் மக்கள் இன்புற்று வாழ்வர். நீயும் இன்புற்று வாழ்வை, என்று அறிவுறுத்தியிருக்கின்ருர். இத்தகைய பாடல் கள் நம் சங்க நூல்களில் பல இடங்களில் காணப்படு கின்றன. இக்கால ஆட்சியாளர்கள் அறிந்து ஒழுகுதற்குக் குறள் நெறி ஒன்றே அமையும் எனினும் இத்தகைய செய்யுட்களும் பெரிதும் பயன்படும். அக்காலப் புலவர்கள் அரசரளிக்கும் பரிசுகளைக் கொண்டே பெரிதும் தம் வாழ்க்கையை நடத்த வேண் டியவர்களாக இருந்தார்கள் என்ருலும் அவர்கள் எத் தகைய துன்ப நிலையிலும் தம்முடைய தகுதியைக் குறைத்துக் கொண்டதில்லை. எவ்வளவு சிறந்த அரச இக இருப்பினும் அவன் அவர்கள் தகுதியறிந்து பாராட்டில்ைதான் அதனை அவர்கள் ஏற்றுக் கொள் வர். "முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்றிதல் யாம் வேண்டலமே” எனச் சற்றுக் காலந் தாழ்த்துப் பரிசளித்த கடிய நெடு வேட்டுவன் என்னும் அரசனை நோக்கிப் பெருந்தலைச் சாத்தனர் கூறியது காண்க. இளவெளிமான் என்னும் அரசன் பெருஞ்சித்திர ர்ை என்னும் புலவரைத் தக்க முறைப்படி பாராட்டாத போது அவர் பெருமிதத்துடன் கூறிய எழுஇனி கெஞ்சம் செல்கம் யாரோ பருகுவன் அன்ன வேட்கை யில்வழி அருகிற் கண்டும் அறியார் போல அகம்கக வாரா முகனழி பரிசில் தாளி லாளர் வேளாரல்லர்.