பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் வாழ்க்கை 121 வருகென வேண்டும் வரிசை போர்க்கே பெரிதே யுலகம் பேணு கர் பலரே...... என்னும் செய்யுளும் இதனை வலியுறுத்தும். இங்ங்னம் பெருமிதத்தோடு வாழ்ந்து, அரசருக்கும் பொது மக்களுக்கும் அறவுரை கூறிப் பிற்கால மக்களுக் கும் என்றும் நின்று பயன் தரத்"தக்க வகையிலே அரிய செய்யுட்களையும் இயற்றிப் பேரும் புகழும் பெற். றுத் திகழ்ந்தனர் நம் சங்க காலப் புலவர்கள். அவர் கட்குப் பின்னர் வந்த சேக்கிழார் பெருமான், கம்பர் பெருமான் முதலிய புலவர்களும் தம்முடைய தகுதி யைக் குறைத்துக் கொள்ளாத வகையிலேயே வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். அவர்கட்குப் பின்னர்த் தோன் றிய புலவர்களுள் சிலர் பொருளுக்காக எத்தனையோ வகைகளில் தம் தகுதியைக் குறைத்துக் கொண்ட னர். பத்து ரூபாயனை நேர் பாப்பைய வேளே ! யுனக் குப் பத்துருபா யென்ன பஞ்சமோ” என்று இடைக் காலப் புலவராய காழி அருளுசைலக் கவிராயர் என்பவர் பத்து ரூபாவுக்கும் ஒரு பாட்டுப் பாடினர். அவர் அதோடு நில்லாமல் மற்ருெரு செல்வரிடம் சென்ற போது, கால் வீழ்ந்து கம்மைக் கவிபாடச் சொன்னனே மேல் வீழ்ந்து நாமே விளம்பினுேம்-நூலறிந்து தங்தக்கால் தந்தான் தராக்கால் கமதுமனம் கொங் தக்கால் என்னுகு மோ என்று வருந்திக் கூறிய செய்யுள் இன்றும் நம் முள்ளத்தை உருக்குகின்றது.