பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கித்திலக் கட்டுரைகள் 'அட கெடுவாய் பல தொழிலு மிருக்கக் கல்வி அதிகமென்றே கற்று விட்டோம் அறிவில்லாமல்’ என்று தம் நிலையினை நினைத்து வருந்தினர் படிக்காசுத் தம்பிரான் என்னும் பெரும்புலவர்.

  • = * * * * * * * * * * * * * ஐயோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்ருன் - பண்ணிஞனே’’ என்னும் ஈற்றடியினையுடைய இராமச்சந்திர கவிராய ருடைய இரக்கப் பாடலை யறியாதார் யாவர் ? சிறிது காலத்துக்கு முன்பு இருந்த மகாவித்து வான் சண்முகம் பிள்ளைக்கு ஒரு பொட்டணம் ஒமப் பொடி வாங்கிக் கொடுத்து விட்டுப் பாடம் கேட்டதாகக் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார் என்னிடம் கூறியிருக்கின்ருர். அண்மையில் மறைந்த பேராசிரி யர் கா. ரா. கோவிந்தராச முதலியார் முதன் முதலில் ஏழு ரூபாக்கள் ஊதியம் பெற்றே ஓர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றினர். என் காலப் புலவர்களும் இருபது இருபத்தைந்து என்று ஊதியம் பெற்று முடிவில் நாற்பது ரூபாக்கள் பெறும் நிலையில் வாழ்ந்தே ஓய்வு பெற்றனர். எனினும் அவர் கள் கூடிய வரையில் தம் தகுதியைக் குறைத்துக் கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதற்காக நூல்கள் எழுதியும் சொற்பொழிவாற்றியும் இரவும் பகலும் பாடம் சொல்லியும் பொருள் தொகுக்க வேண்டியவர் களாக இருந்தனர். இந்த மக்களாட்சிக் காலத்திலே னும் தமிழ்ப் புலவர்களும் தமிழ் மொழியும் சிறந்த நிலை