பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (; கித்திலக் கட்டுரைகள் படுத்த முயலுதல் வேண்டும். ஒவ்வொரு மாணவ. னுக்கும் அவனவன் சூழ்நிலைக்கு ஏற்பப் பலப்பல வழி கள் அமைந்திருப்பினும் பொதுவாக எல்லோருக்கும் பயன்படத்தக்க நெறி ஒன்று உண்டு. இந்தப் பெரு நெறியினையே எல்லா நூல்களும் பலப்பல வகையால் மக்களுக்கு வகுத்துரைக்கின்றன. இதனையே நல் லொழுக்கம் என்று கூறுவர். இத்தகைய நல்ல நெறி யில் ஒரு மாணவன் ஒழுக வேண்டுமானுல் அவனுக்கு ஒரு நல்ல குறிக்கோள் இருத்தல் வேண்டும். குறிக் கோள் இல்லையேல் குன்றில் முட்டிய குரீஇப்போல வும் குறிச்சி புக்க மான் போலவும் மாளுக்கன் இட ருறுவான் . _ குறிக்கோள் உயர்ந்ததாக மட்டும் இருந்தால் போதாது. மாணவன் தன் நிலை, தன் நாட்டு நிலை, காலநிலை முதலிய பலவற்றையும் நன்கு சிந்தித்து அவைகட்கு ஏற்றவண்ணம் தன் குறிக்கோளை வகுத் துக் கொள்ளுதல் வேண்டும் உலகம் எந்நிலையில் உள்ளது? நாம் எந் நிலையில் உள்ளோம் ? பிற நாட்டினரோடு சரிசமானமாக வாழ நாம் யாது புரிதல் வேண்டும்? இவை போன்றவைகளை யும் மாணவன் சிந்தித்தல் வேண்டும். முதலில் மாணவன் தன் உடல் நிலை, உள்ள நிஜல. ஆகிய இரண்டினையும் ஒழுங்கு படுத்திக் கொள்ளுதல் வேண்டும். நல்ல உணவு, உடற்பயிற்சி இவ்விரண் டும் உடல் நிலைக்கு இன்றியமையாதவை. உள்ளத் தூய்மை, உள்ளக் கிளர்ச்சி ஆகிய இவைகளும் வாழ் வில் முன்னேற விரும்பும் ஒரு மாணவனுக்கு மிகவும் இன்றியமையாதவை.