பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*I) கித்திலக் கட்டுரைகள் வடிவேலு அவர்களும் மாணவர் சிறந்ந நூல்களை நெட்டுருப் போடுதலால் பெறலாகும் பயனைக் குறித்து வற்புறுத்திக் கூறியிருக்கின்ருர். நெட்ருப் போடுத லுக்கு மாணவர்க்கு ஊக்கம் தரும் வகையில் அரசாங்கப் பாடதிட்டங்களும் அமைந்திருக்கின்றன. உலக நாடுகளோடு நம் நாடும் முன்னேற வேண்டு மால்ை, நம் நாட்டு மாணவர்கள் புதுப்புதுக் கருவி களைச் செய்யும் சிறந்த விஞ்ஞானிகளாகவும், பொருள் ஈட்டும் துறையில் தேர்ந்த பெரு வணிகர்களாகவும், நம் நாட்டினை வளம் பெறச் செய்யவல்ல பெருந் தலை வர்களாகவும் விளங்குதற்கு வேண்டிய குறிக்கோளுடன் அரிய நூல்களை எல்லாம் ஆழ்ந்து கற்றல் வேண்டும். இந்த எண்ணம் மாணவர் உள்ளத்தில் என்றும் வேரூன்றி யிருத்தல் வேண்டும். உண்ணும் போதும், உறங்கும் போதும், உறங்கி எழும்போதும் இந்த எண் ண்த்துடனே இருக்க மாணவர் பழகி வருவராயின் அவர்கள் எண்ணிய எண்ணங்களெல்லாம் எளிதில் நிறைவேறப் பெற்றுப் பேரும் புகழும் உற்றுப் பல் லாண்டு அன்புற்று இன் புற்று வாழ்வர். இஃது என் அனுபவ நெறி பல சிறந்த பெரியோர்கள் நடந்து காட்டிய நன்னெறி ; பாரதியார், கம்பர், வள்ளுவர் போன்ற பெரியோர்கள் பொன்னெழுத்தில் பொறித் துச் சென்ற உண்மை நெறி.