பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறவாப் புகழ் பெற்றவர் 2. புரிய முயன்றதற்கும் காரணமாக இருந்தது அப்போது அவருக்கு இருந்த ஒரு தீய நட்பே ஆகும். நல்ல காலமாக அந்தத் தீய நட்பும் ஒழிந்தது. அவரும் அந்தக் கொடிய எண்ணங்களிலிருந்து மீண் டார். பெற்ருேர் வளர்ப்பு முறையும் அவர்தம் சிந்தன சக்தியும் அவரைக் காப்பாற்றின. - அவர் உண்மையின் உயர்வை, அகிம்சையின் அவசியத்தைப் பலமுறை ஆழ்ந்து சிந்தித்தார். பிறர்க் கும் விளங்க உரைத்தார் ; நல்ல நூல்களையே தேர்ந் தெடுத்து அமைதியோடு கற்றுத் தெளிந்து அவ்விதம் ஒழுகவும் முயன்ருர். அந்தச் சிறந்த ஒழுக்க நெறியே அவரை உலகம் போற்றும் உத்தமராக ஆக்கியது. நம் நாட்டிலே இப்போது இரண்டு கொள்கைகள் சிறந்து திகழ்கின்றன. ஒன்று காந்தீயம், மற்ருென்று திருவள்ளுவம். இரண்டும் ஒப்புயர்வற்றவை. எனி னும் எத்தனை பேர் அக்கொள்கைகளைக் கடைப்பிடிக் கின்றனர் ? காந்தி அடிகளார் படத்தையும், திருவள் ளுவர் இயற்றிய திருக்குறளையும் வைத்துப் போற்றுவ தால் மட்டும் பயன் சிறிதும் இல்லை. அவ்விரு பேரறி ஞர்களும் தெரிவித்துள்ள வண்ணம் நடக்க முயலுதல் வேண்டும். தம்மால் இயன்ற அளவிலேனும் ஒழுக முயலுதல் வேண்டும். 'கற்க கசடறக் கற்பவை , கற்றபின் கிற்க அதற்குத் தக’ என்ருர் திருவள்ளுவர். காந்தி அடிகளார் இக் குறளை அறிவதற்கு முன்பே தாம் கற்றவைகளையும் கேட்டவை களையும் நன்கு சிந்தித்துப் பார்த்து அவ்விதமே