பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கித்திலக் கட்டுரை கள் ஒழுகித் தம் வாழ்க்கையில் வெற்றியும் கண்டார். பெற ருேரைத் தெய்வமாகப் போற்றி வாழ்ந்த சிரவணன் என்னும் இளைஞன் சரிதையைத் தம் இளம் பருவத்தி லேயே கற்ருர். அந்த இளைஞனைப் போன்றே தம் தந்தையாருக்குத் தொண்டுகள் புரிந்தும், தாய் மொழியினை வேதம் போல் போற்றிக் காத்தும் பேரும் புகழும் பெற்ருர் நம் காந்தி அடிகளார் தம் தந்தை யின் அனுமதி பெற்று ஒரு நாள் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அதைப் பார்த்ததிலிருந்து தாமும் அவ்விதமே என்ன துன்பம் நேர்ந்தாலும் உண்மையே பேசவேண்டும் என்னும் விரதத்தை மேற் கொண்டார். அந்த ஒன்றே அவரைத் தம் வாழ்க்கை யில் உயர்த்தியது ; அவரை உலகம் போற்றும் உத்தமராக ஆக்கியது. காந்தி அடிகளார் ஏழைகளுக்காகவே நூல் நூற்ருர் , தாமும் எளிய வாழ்வில் வாழ்ந்து வரத் துவங்கினர். நீதிக்காகவும் நேர்மைக்காகவுமே போராடி ஞர் ; பிறர் அறியாமல் புரிந்த தவறுகளையெல்லாம் தம் பெருந்தன்மையால் பொறுத்துக் கொண்டார் ; தம்மைப் போலவே தம் மனைவியும் மக்களும் பிறர் நலத்துக்காகவே வாழவேண்டும் என்று விரும்பினர், நம் நாட்டுப் பெண்மணிகளின் கற்பு நெறியினையும், பொறுமைக் குணத்தையும் கண்டு பாராட்டினர். சமூக முன்னேற்றத்துக்கு வழிகோலும் ஆதாரக் கல்வி முறை யினைக் கண்டறிந்து உலகுக்கு உதவினர் ; உடல் வளர்ச்சியினையும் ஒழுக்க வளர்ச்சியினையும் குறிக் கோளாகக் கொண்ட இந்த ஆதாரக் கல்வி முறையைக் குறித்துப் பலப்பல கட்டுரைகள் எழுதியிருக்கின்ருர்.