பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ജു ഖജ്ജ് இதுகுதல் (மணிவண்ணன் கல்லூரி மாணவன். அவனுக்கு இளையவன் கணிகண்னன். அவன் எட்டாம் வகுப்பு மாணவன். இவர்கள் இருவருக்கும் உரையாடல் நிகழ்கின்றது.) கணிவண்ணன் : அண்ணு, உலகத்தொடு ஒட்ட ஒழுகல் என்பது என்ன அண்ணு ? மணிவண்ணன் தம்பி, இது மேல் வகுப்பிலே தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி. இதைப் பற்றி உனக்கு ஆராய்ச்சி ஏன் ? கணி : அப்படியா ? இது எங்கள் பாடத்திலே வருகிறதே நான் நித்தம் மனப்பாடம் செய்யும் திருக் குறளிலே கூட இந்தச் சொற்ருெடர் வருகிறதே ! மணி : அந்தத் திருக்குறளைச் சொல் கேட்கலாம். கணி : உலகத் தே: (டு):ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலா தார்.” மணி : தம்பி, நீ அதன் பொருளையும் சொல்லு வாயா ? கணி அண்ணு, நேற்று எங்கள் ஆசிரியர் அதைக் கூறிஞர் ஆல்ை, எனக்குச் சரியாக விளங்க வில்லை. அதனுலேதான் கேட்கிறேன். மணி : இந்தப் பாடலின் பொருளைத் தெரிந்து கொள்ள உன் போன்ற இளஞ்சிறுவர்கட்குச் சிறிது