பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்ற வண்ணம் ஒழுகுதல் 27 துன்பமாகத்தான் இருக்கும். ஆனல், வள்ளுவர் இதை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தாலே தான் ஒழுக்கம் என்னும் அதிகாரத்திலே இறுதிச் செய்யுளாக இதை அமைத் திருக்கின்ருர். அது இருக்கட்டும், தம்பி, நீ உன் பாடங்களை யெல்லாம் நித்தம் படிக்கின்ருய் அல்லவா ? எதற்காகப் படிக்கின்ருய் ! கணி : என்ன அண்ணு, இது தெரியாதா? மேல் வகுப்பு மாறுவதற்காகப் படிக்கின்றேன். மணி : அவ்வளவு தான அதற்குப் பிறகோ ? கணி அதற்குப் பிறகு நானும் உங்களைப் போலப் பட்டம் பெற்று உத்தியோகமோ, வியா பாரமோ செய்து பொருள் தேடுவேன். மணி : தம்பி, நன்ருகச் சிந்தித்துச் சொல். பொருள் தேடுவதற்கு மட்டுந்தானு நாம் படிக்கின் ருேம் ? சணி இல்லை அண்ணு. இப்போது நினைவுக்கு வருகிறது. படித்தபடியே நடப்பது தான். முக்கியம், என்று எங்கள் ஆசிரியர் கூறியிருக்கின்ருர், மணி : அதுதான் சரி. கண்ணு, நன்ருகப் படித்திருந்தும் படித்தபடியே நடக்காதவர்களை நாம் படித்தவர்கள் என்று சொல்லலாமா ? கணி : சொல்லக்கூடாது. அண்ணு, இப்போது எனக்கு அந்த திருக்குறளின் பொருள் சிறிது விளங்கு கிறது. படித்தபடியே நடப்பவர்கள் அறிவாளிகள் அவ்விதம் நடக்காதவர்கள் எவ்வளவு படித்திருந்தாலும் படித்தவர்கள் அல்லர். நான் சொல்வது சரிதானே ?