பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்ற வண்ணம் ஒழுகுதல் 29 உடனே புலவர், அடி பைத்தியக்காரி, நான் சொல்லி யது ஏட்டுச் சுரைக்காய் ; இது வீட்டுச் சுரைக்காய் ஆயிற்றே !' என்ருராம். கணி சுரைக்காயில் இரண்டு வகையா ! மணி : வயிற்றுப் பிழைப்புக்காகச் சொன்னது ஏட்டுச் சுரைக்காய் ; அதாவது, படித்தபடி நடக்கா மல் மற்றவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வது. நாம் நன்ருகப் படிக்க வேண்டும். நம்மைப் போலப். படித்தவர்கள் உலகத்தில் எவ்விதம் வாழ்கிருர்களோ, அவ்விதம் தாமும் ஒழுக்கத்தோடு வாழவேண்டும். அவ்விதம் வாழாதவர் படித்தும் படியாதவர், அதாவது கற்றறி மூடர். கணி : என்ன அண்ணு, படித்தவன் மூடனுக. எவ்விதம் இருப்பான் ? விளக்கிச் சொல்லுங்கள் அண்ணு ! மணி : தம்பி, அது ஒரு பெரிய கதை. என்ரு லும், சுருக்கிச் சொல்லுகிறேன். ஓர் ஊரில் நான்கு வித்துவான்கள் இருந்தார்கள். மருத்துவப் புலவர், இசைப் புலவர், சோதிடப் புலவர், தருக்க சாத்திரி. இந்த நான்கு பேரும் ஒர் அரசனிடம் சென்று தம் புலமையைக் காட்டினராம். அப்போது அரசன் தனக்கு அருகில் உள்ள அமைச்சனைப் பார்த்து, ‘இவர்களைக் குறித்து உமது கருத்து என்ன ? என்று வினவிஞளும். உடனே அமைச்சன், எனக்கு ஒரு. நாள் ஓய்வு கொடுங்கள் ; சொல்லுகின்றேன். அது வரையில் அவர்கள் என்னிடம் இருக்கட்டும் என்று கூறி அவ்விதமே அந்தப் புலவர் நால்வ்ரையும் அமைச்சன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்ருளும்.