பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்ற வண்ணம் ஒழுகுதல் 31 சொல்லி அந்தச் சோற்றுப் பானையையே எட்டி உதைத்தாராம். அந்தக் கதை தானே இது ? மணி : ஆம், தம்பி, அதுவே தான். அவர்கள், நன்ருகப் படித்திருந்தும், உலகத்தோடு ஒட்டி வாழத் தெரிந்து கொள்ளவில்லை. அதற்காகத் தான் இப் போது பாடங்களெல்லாம் குடும்பத்துக்கு ஏற்ற பாட மாக இருக்கவேண்டும் என்றும் மானவர்கள் படித்த படியே நடக்க முயல வேண்டும் என்றும் அரசாங்கத் தா கூறுகின்றனர். கணி : அண்,ை நான் சாரன இயக்கத்தைச் சார்ந்தவன். எனக்குச் சமைக்கக் கூடத் தெரியும். நூல் நூற்பேன் ; துணிநெய்வேன் ; பாய் முடைவேன். எங்கள் பள்ளியில் எல்லாம் கற்றுக் கொடுக்கிருர்கள். மணி : இவ்விதம் வாழ்க்கைக்கு வேண்டிய வகையில் பாடங்கள் இப்போது அமைந்திருப்பதற்குக் காந்தி அடிகளே அடிகோலினர். வார்தாக் கல்வித் திட்டம், ஆதாரக் கல்வி முறை என்றெல்லாம் இப் போது கூறுகின்ருர்களே, அவையாவும் மக்கள் வாழ்க் கைக்கு ஏற்ற முறைகளே யாகும். கணி : காந்தி அடிகள் சுய ஆட்சியை மட்டும் அளிக்கவில்லை ; மக்கள் வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் காட்டியிருக்கின்ருர் , என்று எங்கள் தலைமை ஆசிரியர் காந்தி விழாவில் மிகவும் விரிவாக ஆர்வத்தோடு பேசினுர். அண்ணு, எனக்கு நேரம் போனதே தெரியவில்லை ! நாளைக்கு எங்கள் பள்ளியில், ஒரு கூட்டு வியாபாரம் நாங்களே நடத்தப் போகிருேம். அதற்கு வேண்டிய பொருள்களையெல்லாம் சேர்க்க உடனே ஒரு பட்டி தயார் செய்யவேண்டும். அது