பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கித்திலக் கட்டுரைகள் மிகவும் திறமையாக நடத்தி இருப்பதைச் செயலாளர் படித்த நிகழ்ச்சிக் குறிப்பினுள் அறிந்து மகிழ்ந்தேன். இந்த வாரம் நீங்கள் பேச எடுத்துக் கொண்டிருக்கும் பொருள் மிகவும் சிறந்ததாகும். நீங்கள் பேசத் தொடங்கும்முன் முற்காலம், தற்காலம் இவற்றைப் பற்றி ஒரு வரையறை செய்துகொள்ள வேண்டும். தற்காலம் என்பதற்குக் குறிப்பிட்ட காலம் என்பதே பொருள். அதனினும் இக்காலம் என்று கொண்டால் தெளிவாக இருக்கும் என்பது என் கருத்து. முற்காலம் என்பது எது நமக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் முற்கால நிகழ்ச்சிகளே எனினும் முற்காலம் என்பது நம் வழக்கில் சங்க காலத்தையே குறிப்பாக உணர்த்தி வருகின்றது. ஆகவே சங்ககாலப் பழந் தமிழர் வாழ்க்கை நெறி சிறந்ததா? இக்கால வாழ்க்கை நெறி சிறந்ததா ? என்ற பொருளையே இன்றைய வாதத்திற்குத் தலைப்பாகக் கொண்டு கலையரசியாரை முதலில் பேசும்படி அழைக்கின்றேன். கலையரசி அறிவிற் சிறந்த தலைவர் அவர்களே ! நண்பர்களே ! அனைவர்க்கும் என் பணிவார்ந்த வணக்கம். நான் நம் முற்கால வரலாற்றையும் இக் கால வரலாற்றையும் விரிவாக எடுத்துக் கூறி உங்கள் பொன்னை நேரத்தை வீணுக்க விரும்பவில்லை. எடுத்துக் கொண்ட பொருள் பற்றிச் சில கருத்துக்களை மட்டும் உரைத்து என் கொள்கையை வற்புறுத்த விரும்புகின்றேன். வாழ்க்கை என்ருல் என்ன * உயிர் உடலோடு கூடி வாழ்வதே வாழ்க்கை என்பது அனைவரும் அறிந்ததே. சிறந்த வாழ்க்கை எது ? உயிர் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்