பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நித்திலக் கட்டுரைகள் உழைத்துத் தம் தேவைக்குரிய பொருளைப் பெற வாய்ப்பு இருந்தது. உழைப்புக்கு ஏற்ற வருவாய் ; தேவைக்கு ஏற்ற வசதி அனைவருக்கும் கிடைத்தன. வேலையில்லாத்திண்டாட்டம் என்பதே அக்கால மக்கள் அறியாததாகும். ஆல்ை இக்கால நிலை என்ன? வேலை யில்லாத் திண்டாட்டமும் பஞ்சமும் பசியும் மக்களை வாட்டி வதைத்தலை அறியாதார் யாவர் ? அடுத்ததாக முற்கால மக்களிடம் சிறந்த ஒழுக் கமும் உண்மையும் நிரம்பி இருந்தன. பிறரை வஞ் சித்து வாழ்வதைப் பெருங்குற்றமாக அவர்கள் நினைத் தனர்; தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை என்று எண்ணினர். பிறர்க்கு உதவுவதால் கேடு வரும் எனின் அக்கேட் டினைத் தன்னை விற்ருயினும் கொள்ளவேண்டும் என் பதே அவர்கள் குறிக்கோள்.

  • ஒப்புரவில்ை,வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து ’’ என்பதன்ருே வள்ளுவர் வாக்கு ? இத்தகைய மக்கள் வாழ்வில் பொருமைக்கோ பூசலுக்கோ இடம் இருந்தி ருக்குமா? இனவேறுபாடு, குல வேறுபாடு, மதவேறு பாடு என்ற உணர்ச்சிக்குத் தான் இடம் இருந்: திருக்குமா ? ஆதலால் அக்கால மக்கள் வாழ்க்கையில் ஒற். றுமை நிலவியது ; உயர்வு பெருகியது எனவே " நாடெங்கும் வாழக்கேடொன்றும் இல்லை' என்ற கொள்கையுடன் உயரிய வாழ்வு வாழ்ந்த முற்கால மக்கள் வாழ்வே சிறந்தது என்று நான் வற்புறுத்த விரும்புகின்றேன்.