பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நித்திலக் கட்டுரைகள் வளர்ச்சியால் அவன் சமைத்துண்ணத் தெரிந்து கொண்டான் ; உழுது உணவுப் பொருள்களை விளை விக்கக் கற்றுக் கொண்டான். மரத்தில் உறங்கிய மனி தன் வீடுகட்டி வாழத்தொடங்கினன். தழைகளையே உடையாக அணிந்து வாழ்ந்தவன் அழகிய ஆடை அணிகளை அணியக் கற்றுக்கொண்டான். இவை யாவும் செயற்கையல்லவா ? என்ருலும் அந்த நாகரிகங்கள் யாவும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்பத்தோன் றிய வாழ்க்கை வசதிகள் அல்லவோ ? அவை போலவே இன்று மின்விசை முதல் அணுசக்திவிசை வரை தோன்றியுள்ள யாவும் மக்களின் அறிவினுல் ஏற்பட்ட வசதிகளேயாம். இவற்றைச் செயற்கை என்று புறக் கணிப்பது அறிவுடமையாகுமா ? பண்டைக்காலத் தில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை என்று குறிப். பிட்டார். இஃது அடிப்படை உண்மையை மறந்தோ மறைத்தோ பேசுவதாகும். பண்டைக் காலத்தில், மக்கள் தொகை மிக மிகக் குறைவு ; அவர்கள் தேவை. யும் குறைவு. தேவைக்கு மேல் உற்பத்தி அதிகமாக இருந்தது. அதனுல் மக்களிடம் வேலையில்லாத் திண் டாட்டமோ, பஞ்சமோ, பசிப்பிணியோ நேர வாய்ப்பு இல்லை. ஆனல் இக்கால நிலை என்ன ? ஒவ்வோ ராண்டும் மக்கள் தொகை கோடிக் கணக்கில் பெருகி வருகின்றது. அதனுல் வாழ்க்கை வசதிகள் குறைவதும், வேலையில்லாத் திண்டாட்டம் நேர்வதும் இயற்கையே. எனினும் இக்கால அறிஞர்கள் தம் அறிவாற்றலால் அத்தகைய அவலநிலை ஏற்படாமல் கண்காணித்து வருவதை எண்ணி நாம் மகிழ வேண்டியிருக்கக் குறை கூறுவது பொருந்தாது.