பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கித்திலக் கட்டுரைகள் நேரில் கண்டு பெரிதும் பயனடைந்திருக்கின்ருர்கள். இப்போதுள்ள புலவர்கள் எல்லாம். வித்துவான் பட்டம் பெற்று நல்ல ஊதியத்தையும் அடைந்து வருவதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை ஆறிஞர் பலரும் நன்கு அறிவர். சுருக்கமாகக் கூறினுல் அவர் ஒரு சீர்திருத்தக்காரர் முருகப் பெருமானிடத் திலே பேரன்புகொண்டவம் புதுமுறைக் கல்விக்கு வேண்டியவைகளே எல்லாம் வாங்கிப் படித்து அந்தப் முறையைப் பரப்புவதற்குக் காரணமாக இருந்த لنائي إلا வர் ; குருபக்திமிகுந்தவர் ; நன்றியறிதல் உடையவர் ; ஒரு சிறந்த அறிவாளி பொறுமைக்கே ஓர் இருப்பிட மானவர் ; பெருந்தன்மை வாய்ந்தவர். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். நான் முதலில் அவரைக் கண்டு பயனடைந்த அந்த ஒரு நிகழ்ச்சியைமட்டும் தெரிவித்தாலே போது மென்று எண்ணுகின்றேன். நான் சொல்லப்போகும் செய்தி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகட்குமுன் நிகழ்ந் தது. என் ஆசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் என்னையும் ஆசிரியத் துறையிலே ஈடுபடுத்துவதற்காக ஓர் நாள் என்னை நமச்சிவாய முதலியார் இல்லத் திற்கு அழைத்துச் சென்ருர் அப்போது அவர் சென்னையிலே கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலே ஆ_ள்ள 'காவேரி இல்லம்' என்னும் நிலையத்திலே வாழ்ந்து வந்தார். நானும் என் ஆசிரியரும் அவ ரைப் பார்க்கப் போகும்போது அவர் ஒரு சாய்வு நாற் காலியிலே படுத்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றிப் பல பெரிய புலவர்கள் நாற்காலி யிலே அமர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.