பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நித்திலக் கட்டுரைகள் போட்டு, நீங்களும் வாருங்கள் " என அழைத்தார். அப்போது எங்கள் ஆசிரியர் எனக்குக் கொஞ்சம் "ஜோலி" இருக்கிறது என்று நகைத்துக் கொண்டே கூறினர். அடுத்திருந்தவர் இஃதென்ன கேலிப் பேச்சு; வாருங்கள் ஜாலியாக இருக்கலாம் என்று அவரையும் ையைப்பிடித்து அழைத்துச் சென்ருர் உடனே அந்த இடம் காலியாகிவிட்டது. நான் தன்னந்தனி யணுக வீடுபோய்ச் சேர்ந்தேன் ஒரு வாரம் கழித்து எங்கள் ஆசிரியர் என்னிடம் ஒரு கடி தத்தைக் கொடுத்து நமச்சிவாய முதலியாரைக் கண்டு வரும்படி அனுப்பினர். சென்ற வாரம் போலவே அப்போதும் மணி சுமார் பன்னிரண்டு. இருக்கலாம். ஆனல் அங்கே அவரில்லை. வீட்டிலே இருந்தவர்கள் அன்றைக்கும் அவர் ஒரு பெரிய விருந்: துக்குச் சென்றிருப்பதாகக் கூறினர்கள். ஆகையால் நான் என் வீட்டுக்குத் திரும்புவதற்கு எண்ணிக் கொண்டு அவர் வீட்டு வாசற்படி வரை வந்துவிட் டேன். அதே சமயத்தில் ஓர் அழகிய கோச்சு வண்டி யிலிருந்து நமது முதலியார் பல புலவர்களுடன் வந்து இறங்கினர். கையில் கடிதத்தோடு நின்று கொண்டி ருந்த என்னைக் கண்டதும், "நீங்கள் தானு 'முத்து' என்பவர் ? நாவுக்கரசு கடிதம் கொடுத்திருக்கிருரா ? உள்ளே வாருங்கள்” என்று என்னை அழைத்துக் கொண்டு, மேன் மாடியை அடைந்தார். அங்கே சென்றதும் அவர் தம் மனைவியாரை அழைத்து, அங்கு வந்துள்ள எல்லோருக்கும் இலைபோட்டு உணவு பரி மாறக் கட்டளையிட்டார். நல்ல காலம் ! அங்குள் ளோர் எவரும் உணவு கொள்ளாமலே இருந்தார்கள்