பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமச் சிவாய முதலியாரும் கானும் 55 அது எனக்கு மிகவும் எளிய செயலாக இருந்தா லும், அதற்காக நீான் பல ஆங்கில நூல்களை யெல் லாம் விலைகொடுத்து வாங்கிப் படித்து நம் நாட்டின் நிலையையும், நம் குழந்தைகளின் நிலையையும் நன்கு எண்ணிப் பார்த்து எழுதத் துவங்கினேன். அது எனக்கு ஒரு வகையில் நல்ல பெயரையே கொடுத்தது. அந்த ஊக்கத்தினுல் உயர்நிலைப் பள்ளிகட்கும் பாடம் எழுதத் துணிந்தேன். உங்களைப் போன்ற ஆசிரியர் களின் நல்ல எண்ணத்தினலே, அதிலும் நான் நல்ல பெயரையே ஒரு வகையில் பெற்றுவிட்டேன்' என்று கூறினர். அந்தச் சொற்கள் என் உள்ளத்தைப் பெரி தும் உருக்கி விட்டன. உடனே நான் ' என்னிடம் கூட இவ்வளவு எச்சரிக்கையோடு பேச வேண்டுமா ? குழந்தைகட்கு மட்டுமின்றிப் பேரறிஞர்கட்கும் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் திறமை வாய்ந்த வர்கள் நீங்கள். உங்களைப் போன்ற அறிஞரை நான் இது வரை கண்டதே இல்லை . நாங்கள் எல்லாம் இவ்வளவாவது நன்மை யடைந்திருப்பதற்கு நீங்கள் தான் காரணம்' என்றெல்லாம் கூறினேன். அவர் தம்முடைய வாழ்க்கை வரலாற்றைத் தாமே எழுதி யிருப்பாரேயானுல், அஃது ஓர் ஒப்பற்ற வாழ்க்கை வரலாருகவே நமக்கெல்லாம் இருந்திருக் கும். அவருக்கு அறுபது வயது நிரம்பும் தருவாயில் இருந்தபோது அவரைப் பாராட்டுவதற்காக நாங்கள் எல்லாம் எவ்வளவோ திட்டங்கள் வகுத்திருந்தோம். அவரும் தம்முடைய மணி விழாவிற்குப் பிறகு, தம் முடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாகவும், தமி ழர்களுக்காகக் கடற்கரை ஓரத்திலே ஒரு பெரிய மண்ட