இயற்கைக் காட்சிகளையே தம் உள்ளத்தில் நினைந்து நினைந்து இன்புற்று இயற்கை யெழில் நலங் குறித்தே அழகொழுக எழுதியும்:பேசியும் அருந்தொண் டாற்றி இயற்கையில் இரண்டறக் கலந்த தமிழ்ப் பெரி யார் திரு. வி. க. அவர்களை நான் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக அறிந்து பழகி மகிழும் வாய்ப்பினைப் பெற்றேன். நானும் அவரும் ஒரே பள்ளியில் ஒரே ஆசிரியரிடம்-தமிழ் பயின்ருேம். வெஸ்லி மிஷன் கல்லூரியில் நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண் டிருந்த போது அவர் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். பள்ளியில் திரு. வி. க. அவர்கள் ஒன்பதாம் வகுப்பினை அடைவதற்குள்ளாகப் பலப்பல இன்னல் கள் தோன்றி அவரை நிலை கலங்கச் செய்தன. மழலைப் பருவத்தில் உடற்கொழுமையோடு வளர்ந்த நம் தமிழ்ப் பெரியார் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலை முடக்குவாத நோய் கண்டு இரண்டாண்டுக் காலம் பெருந்துன்ப முற்ருர், பலப் பல சிகிச்சைகளினல் திரு வி. க. வின் உடல் நன்னிலை
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/63
Appearance